பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 இன்பவியல் கண் மூன்றுடையானும் காக்கையும் பையரவும் என்னின்ற யாயும் பிழைத்ததென்-பொன்னின்ற கோங்கரும் பன்ன முல்ேயாய்! பொருள்வயின் பாங்களுர் சென்ற நெறி. . . * * 400 பொன்னிறத் தேமல் தோன்றியுள்ள-கோங்கு ம்ொக்குப் போன்ற முலையை யுடைய என் தோழியே ! (என்னை மன்மதன் மலர்தூவி வருத்துகிருன்; குயில் இனிமையாகக் கூவி இன்பத்தைத் தூண்டுகிறது; வெண்ணிலா தோன்றி என்னை வெம்பச் செய்கிறது. யான் பிறந்ததாலேயே இவ்வளவு துன்பப்படுகிறேன். இருப்பினும்,) மன்மதனை முதலில் எரித்துப் பின் எழுப்பிவிட்ட மூன்று கண்கள் உடைய சிவனும், குயில் முட்டையைத் தன் கூட்டில் வைத்துக் குஞ்சு பொரித்த காகமும், நிலாவை (கிரகண காலத்தில்) விழுங்கிப் பின் உமிழ்ந்து விட்ட படமுடைய இராகு என்னும் பாம்பும், எனக்குப் பிறவி தந்த என் தாயும் தவறு செய்துள்ளதாக என்ன கூறுவது ? அவர் களின்மேல்-அவைகளின்மேல் குற்றம் சொல்லிப் பயனில்லே. பக்கத்தில் இருக்கவேண்டிய என் கணவர் பொருள் ஈட்டும் காரணமாகப் பிரிந்து சென்றுள்ள அச்சத்திற்கு உரிய வழியே தவறு உடையதாய் என் பிரிவுத் துன்பத்திற்கக் காரணமாக உள்ளது. 400 நாலடியார் நயவுரை முற்றிற்று