பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 இல்லறவியல் காட்டுவள நாடனே! நண்பர் துன்பம் செய்யினும், அஃது இன்பமே - போனுல் போகிறது என்று பொறுத்து, துன்பம் நேர்ந்ததற்குத் தன்னைத்தானே நொந்து கொள்ள வேண்டுமே தவிர, நெருங்கிப் பழகிய நண்பரைக் கைவிட லாகாது; பிரிதல் என்பது விலங்கிற்கும் இயலாதது. 6 ஒல் என அருவி ஒலித்தோடும் உயரிய நல்ல மலே நாடனே!பெரியோர்து உயர்நட்பைக்கொள்வது,தாம்செய்த தவறுகளைப் பொறுத்துக் கொள்வர் என்பதன லன்ருே? அங்ங்னமெனில், தவறின்றி நல்லனவே செய்வார்க்குப் பெரியோர்கள் கிடைத்தற்கு அரிய ராவரோ? 7 வளமெல்லாம் வற்றி மேலும் மிகப் பசித்தாலும், பண் பற்ற அற்பரிடம் வறுமையை வெளிப்படையாகக் கூறற்க. பசியால் தமது உயிரைக் கைவிடும் துணிவு இல்லாதவர், தமது வறுமையை நீக்கும் துணையாளரிடமே தம் துன்பத் தைக் கூறுவது வழக்கம். - 8 உயர்ந்த அருவிகள் ஒடும் நாடனே! ஓர் இன்பம் ஒழி யாது கிடைப்பினும், அது பழியின்றி யிருத்தலே சிறந்த தாம்; எனவே, ஒரு பொருள் மிக்க இன்பம் அளிப்பினும், அங்கே இழிவு சிறிது தலைகாட்டிலுைம், இன்பம் காரண மாக அதனை ஏற்றுக்கொள்ளலாகாது. 9 தான் கெட்டாலும் நல்லார் பிறர்க்குக் கேடு சூழற்க. பசியால் தன் உடம்பின் தசை சுருங்கிலுைம் உண்ணத் தகாதவர் கையுணவை உண்ணற்க. வானம் கவிந்துமூடிய வையகம் முழுதும் கிடைப்பதானுலும், இடையிடையே பொய் கலந்த சொற்களைச் சொல்லற்க. 10