பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறம் 14 2. பிறர்மனை நயவாமை அச்சம் பெரிதால்; அதற்கின்பம் சிற்றளவால்; நிச்சம் நினையுங்கால் கோக்கொலேயால்; நிச்சலும் கும்பிக்கே கூர்த்த வினையால் பிறன்தாரம் நம்பற்க நாணுடை யார். 11 அறம்புகழ் கேண்மை பெருமையிந் நான்கும் பிறன்தாரம் நச்சுவார்ச் சேரா ;-பிறன்தாரம் நச்சுவார்ச் சேரும் பகையழி பாவமென்(று) அச்சத்தோ டிந்நாற் பொருள். 12 புக்க விடத்தச்சம்; போதரும் போதச்சம்; துய்க்கு மிடத்தச்சம்; தோன் ருமல் காப்பச்சம்; எக்காலும் அச்சம் தருமால், எவன்கொலோ உட்கான் பிறனில் புகல். - 13 காணின் குடிப்பழியாம்; கையுறின் கால்குறையும்; ஆணின்மை செய்யுங்கால் அச்சமாம்;-நீனிரயத் துன்பம் பயக்குமால், துச்சாரி நீகண்ட * இன்பம் எனக்கெனேத்தால் கூறு. 14 செம்மையொன் றின் றிச் சிறியார் இனத்தராய்க் கொம்மை வரிமுலையாள் தோள்மரீஇ-உம்மை வலியால் பிறர்மனேமேல் சென்ருரே, இம்மை அலியாகி ஆடியுண் பார். 15