பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 இல்லறவியல் 2. பிறன் மனைவியை விரும்பாமை பிறன் மனேவியை விரும்புவதால் அச்சம் மிகுதியாம்; அச்சத்தை நோக்க இன்பமோ சிறிய அளவேயாம். நித்தம் நினைத்துப் பார்க்கின், அரச ஒறுப்பு (தண்டனை) கிடைக் கலாம்; நரகத்திற்கு உரிய மிகுந்த திவினையும் பெருகும்; எனவே, நாணம் உடையவர் பிறன் மனேவியை நம்பி விரும்பற்க. 11 பிறன் மனைவியை விரும்புபவரை அறம், புகழ், நட்பு, பெருமை ஆகிய நான்கும் அடையா; மாருக, அவரை, பகை, பழி, பாவம், அச்சம் என்னும் நான்குமே வந் தடையும். 12 பிறன் மனையாள் இருக்குமிடம் புகும்போதும் அச்சம்; திரும்பும்போதும் அச்சம்; இன்பம் துக்ரும்போதும் அச்சம்; வெளித்தெரியாமல் காப்பதிலும் அச்சம்; ஏன்.எப்போதுமே அச்சம் ஏற்படும்; எனவே, ஒருவன் அஞ்சாதவனுய்ப் பிறன் மனேவியிடம் செல்லுதல் ஏனே? 13 பிறன்மனை புகுவதைப் பிறர் காணின் குடிக்குப் பழியாம்; அகப்பட்டுக்கொண்டாலோ கால் துண்டிக்கப்படும்; ஆண் மைக்கு ஏலாத திப்புணர்ச்சி செய்யுங்கால் அச்சமாம்; நீண்ட நரகத் துன்பமும் கிடைக்கும்; எனவே, ஏ. காமுகனே 1 நீ பெற்ற இன்பம் என்னதான் என்று எனக்குக் கூறு. 14 ஒழுங்கு ஒருசிறிதும் இன்றி, அற்பர் கூட்டத்தைச் சேர்ந் தவராகி, திரட்சியும் தேமலும் கொண்ட முலைகளையுடைய பிற பெண்ணின் தோளைத்தழுவி, முற்பிறப்பில் தமக்கிருந்த வலிமையால் பிறர் மனேவியிடம் சென்றவரே. இப்பிறப்பில் பேடிகளாகி ஆட்டம் ஆடி உண்டு கழிக்கிருர்கள். 15