பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 இல்லறவியல் நல்ல நாள் கேட்டறிந்து பலரும் அறிய மணமுரசு கொட்டித் திருமணம் செய்துகொண்டு காவல்மனே புகுந் துள்ள மென்மைத் தன்மையுடைய அன்பு மனையாட்டி அகத்திருக்க, ஒருவன் அயலான் மனைவியை நோக்குவது ஏனே? - 16 அயலார் பழி தூற்ற, தம் உறவினர் நடுங்கி வருந்த, மாற்ருன் மனைவியை மருவிப் புணர்ந்து மயக்குற்று அவ ளேயே நம்பிக்கிடக்கும் நிலையற்ற நெஞ்சத்தானது காம நுகர்ச்சி, பாம்பின் தலையை நக்கிச் சுவைப்பதுபோன்ற தன்மையுடையது. 17 அறிவுடையவரிடம் தோன்றிய காமநோய், வெளிப்படா மலும் பரவாமலும் பலரிடமும் அறியப்படாமலும் வெளியா ல்ை பகைவரிடம் நாணப்படுவதற்கு அஞ்சி ஒருவரிடமும் ஒருசிறிதும் உரைக்கப்படாமலும் உள்ளேயே தணிந்து விடும். ஆ ஆ! அது மிகவும் கடுமையானது ! 18 அம்பும் நெருப்பும் ஒளிவிடும் கதிர்களையுடைய செஞ் ஞாயிறும் வெம்மையாய்ச் சுட்டுத் தாக்கினும் வெளியுடம் பைய்ே சுட்டு வருத்தும்; ஆல்ை காமத்திய்ோ, வெதும்பிக் கவலையுறச்செய்து உள்மனத்தையே சுட்டுத்தாக்குவதால், அம்மூன்றினும் அஞ்சப்படவேண்டியதாம். 19 ஊருக்குள் மூண்டெழுந்த அச்சம் மிக்க சிவந்த நெருப் புக்குத் தண்ணிருள் மூழ்கியும் தப்பித்துக்கொள்ளலாம்; ஆல்ை காமத்தியோ, நீருக்குள் மூழ்கினும் சுடுந்தான்; மலைமேலேறி மறைந்துகொள்ளினும் விடாது சுடும். 20