பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறம் 18 3. ஈகை இல்லா இடத்தும் இயைந்த அளவில்ை உள்ள இடம்போல்' பெரிதுவந்து-மெல்லக் கொடையொடு பட்ட குணனுடை மாந்தர்க்(கு) அடையாவாம் ஆண்டைக் கதவு. 2 முன்னரே சாம்நாள் முனிதக்க முப்புள; பின்னரும் பீடழிக்கும் நோயுள;-கொன்னே பரவன்மின்; பற்றன்மீன்; பாத்துண்மின்; யாதும் கர வன்மின்; கைத்துண்டாம் போழ்து. 22 நடுக்குற்றுத் தற்சேர்ந்தார் துன்பம் துடையார் கொடுத்துத்தாந் துய்ப்பினும் ஈண்டுங்கால் ஈண்டும்; இடுக்குற்றுப் பற்றினும் நில்லாது செல்வம்; விடுக்கும் வினேயுலந்தக் கால். 23 இம்மி அரிசித் துணையானும் வைகலும் நும்மில் இயைவ் கொடுத்துண்மின்;-உம்மைக் கொடா அ தவரென்பர் குண்டுநீர் வையத்(து) அடாஅ அடுப்பி னவர். - 24 மறுமையும் இம்மையும் நோக்கி ஒருவர்க்(கு! உறுமா றியைவ கொடுத்தல்;- வறுமையால் ஈதல் இசையா தெனினும், இரவாமை ஈதல் இரட்டி யுறும். 25