பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9i இல்ல றவியல் பலரும் விரும்ப வாழும் நல்லோர், ஊர் நடுவே மேடை யால் சூழப்பெற்றுள்ள குலேகாய்க்கும் பனைமரம் போன்றவ ராவர்; செல்வத்தால் குடும்பம் செழித்திருந்தபோதிலும் பிறர்க்குக் கொடுத்துண்ணுத மாக்க்ள் சுடுகாட்டிலுள்ள காய்க்காத ஆண் பனே போன்றவர்ஆவ்ர். 26 ເຮີເກົ່r புலால் நாற்றத்தைப் புன்னேமலரின் நறுமணம் போக்குகின்ற அலமோதுங் குளிர்ந்த கடற்கரை நாடன்ே! பெய்யவேண்டிய அளவு மழைபெய்யாதுபோயினும், உலக நன்மக்கள் செய்யவேண்டிய நன்மைகளைச் செய்யாதொழி யினும், இவ்வுலகம் பிழைக்கும் வழி என்னவோ? 27 கலக்கும் ஆறுகளால் வளம் மலியும் குளிர்ந்த கடல் நாடனே இரந்து கேட்கும் கையை மறுக்காமல் யாதா யினும் தம் அளவுக்குத் தக இல்லாதார்க்கு சுவதே ஆண் மையின் கடமை. பதிலுக்குத் தரக்கூடிய செல்வர்க்கு ஈதலோ, நல்ல கடன் என்னும் பெயரே பெறும். 38 தமது உடைமை மிகவும் சிறியது என்று கருதாமலும், இல்லையென்று கூருமலும், எப்போதும் யார்க்கும் அறப் பயனைச் செய்துவருக. இதனுல் வாயிற்படிதோறும் முறை யாகப் பிச்சைக்குப் புகும் துறவியின் உண்கலம் நிறைவது போல, மெல்ல மெல்ல நல்வினை நிறைக்கப்படும். 29 குறுந்தடியால் கண்வாயில் அடிக்கப்படும் முரசொலியை ஒரு காதத்தில் உள்ளோர் கேட்பர்; இடியிடித்து முழங் வதை ஒரு யோசனை தொலைவிலுள்ளோர் கேட்பர்; பெரியார் கொடுத்தார் எனப்படும் புகழ்ச் சொல்லையோ, அடுக்கிய மூவுலகிலும் உள்ளவர்களும் கேட்பரே ! 30