பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 இல்லறவியல் பல கற்று நிரம்பிய கேள்வியறிவின் பயனும் உணர்ந்த அறிஞர்கள் விரைவில் இறக்கவும், கல்லாத முடர் நெடுங் காலம் வாழ்வதன் காரணம் அறிய விரும்புவிரேல், கல்லா தார் அறிவு என்னும் ஊட்டப்பொருளைத் தம்மிடம் பெற் றில்லாமையால், அவர்தமைச் சக்கை என்று கருதி எமன் கொள்வதில்லை. அடம்பம் பூவை அன்னம் கிழித்து விளையாடுகின்ற அலை வீசுங் குளிர்ந்த கடற்கரை நாடனே! சிலர் துன்பம் மிக்க நெஞ்சுடையவராய், பலரும் பார்க்கும்படி,பலருடைய நீண்ட கடைவாயிலில் நின்று இரந்து அலைவதெல்லாம், பழைய திவினையின் பயனே யாகும். * 37 காற்று வீசி நெய்தல் மலர் மணம் பரப்பும் நீண்ட குளிர்ந்த கடற்கரை நாடனே ஒருசிலர், ஒன்றும் அறியாத வரும் அல்லராய், அறியவேண்டியதை அறிந்துங்கூட, பழிபட்ட திச்செயல் புரிவது, முன்செய்த தீவினையால் நிகழ் வதே யாகும். 38 கடல் சூழ் உலகில் யாவரும் ஒரு சிறிதும் தீமையை விரும்பார்; எவரும் விரும்பும் பயன்கள் நற்பயன்களே ! ஆல்ை, ஒருவர் விரும்பினும் விரும்பாவிடினும், வரக்கூடிய நன்மை திமைகள் வராமல் விடுதல் இல்லை. 39 சிறிய கருவிலேயே அமைந்துவிட்ட பழவினைகள் குறை வதில்லை; மிகுவதில்லை; முறைமாறி நடப்பதுமில்லை; துன் பக்காலத்தில் ஊன்றுகோல்போல் துணையாவதுமில்லை; ஆகவேண்டிய நன்ள்ை வரும்போதே எல்லாம் ஆகும்; எனவே, அழிவு வரும்போது வருந்துவது ஏனே? 40