பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 இல்லறவியல் விரிந்த கண்களுடைய பெண்ணே பேய்ச்சுரைக்காயில் உப்பு, நெய், பால், தயிர், பெருங்காயம் முதலியன இட்டுச் சம்ைப்பினும் கசப்பு நீங்காது; அதுப்ோல, எப்போதும் அடங்காத முரடர்கள், விரிவாக மெய்யறிவு நூற்களைக் கற்பினும் என்றும் அடங்கமாட்டார்கள். 43 புன்னேயின் மிக்க பூமணங் கமழும் சோலையும் விரிந்த நீர்ப்பரப்பும் உடைய கடற்கரை நாடனே வரவேண்டியது யார்க்கும் வந்தேதீரும். எனவே, தம்மை இகழக்கூடிய வரைத் தாம் அவர்க்குமுன் இகழ்வாராக அவரோடு ஆகக் கூடியது என்ன? - 47 பசுக்கள் பல பல்வேறு நிறங்கள் உடையவாயினும், அவை தரும் பால் வெண்மையன்றி வேறு நிறத்ததன்று; அறநெறிகள் பசுக்களைப்போல் பல்வேறு வடிவங்களில் இருப்பினும், அவற்றின் பயன், பால்போல ஒரே நல்லியல்பு உடையதாகும். 48 ஆராயுங்கால், உலகில் ஒரு சுட்டுச் சொல்லும் பெருதவர் யார்? வாழ்வில் சூழ்ச்சியால் வாழாதவர் யார் ? இடை யிலே துன்பம் அடையாதவர் யார் ? இறுதிவரையும் செல் வராய் இருந்தவர் யார் ? 49 உயிரை எமன் பிடித்துக்கொண்டு ஒடும்போது, தாம் பேணி அழகுசெய்து காத்த உடலும் உடன் வந்து பயன் தராது. எப்படி ஆராய்ந்து பார்க்கினும், தம்முடன் வரக் கூடியது, தாங்கள் செய்த வினைகளைத் தவிர மற்று வேறு ஒன்றும் இல்லை. . . - 50