பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31 இல்லறவியல் 6. திச்செயல் புரிய அஞ்சுதல் உலகத் துன்பத்துள் மயங்கித் துறவுநெறியைக் கொள் ளாத மக்களின் பிணங்களை உடையன சுடுகாடுகள். அறிவு கெட்ட அற்பர்களின் வயிறுகளோ, மிகுந்த விலங்குகட்கும் பறவைகட்கும் சுடுகாடுகளாம். 51 வண்டுகள் ஒலிக்கும் காட்டினுள் வாழும் கவுதாரியை யும் காடையையும் கூட்டினுள் கொண்டுவந்து அடைத்து வைப்பவர்கள், மறுமையில் இரும்பு விலங்கு ஒலிக்கும் கால் உடையவராய், அயலார்க்கு அடிமையாய், கருப்பங் கொல் ஆலயில் வேலை செய்வார்கள். 52 முற்பிறப்பில் நண்டை விரும்பி அதன் கால்களை ஒடித்து உண்ட பழைய திவினை இப்பிறப்பில் வந்தடையின், சங்கு மணிபோல் உள்ளங்கை தவிர மற்ற விரல்கள் அழுகித் துன்பம் மிக்க தொழுநோயுடன் திரிவர். 5 நெய் போன்ற குளிர்ந்த பொருளும் நெருப்பின் வெப் பத்தைச் சேரின் எரிக்கும்படிச் சுட்டுத் துன்ப நோயைத் தரும். அதுபோல, கோணலற்ற நேர்மையாளரும் கடுஞ் செயலாளரைச் சார்ந்தால், நேர்மை கோணி, மிகவும் கொடுந்தொழில் புரிபவ ராவர். 54 பெரியோர் நட்பு பிறைநிலாப்போல நாடோறும் படிப் படியாக வளரும்; சிறியோர் நட்போ, வானில் செல்லும் முழுநிலாப்போல நாடோறும் படிப்படியாய்த் தானகலுே தேய்ந்து குறையும். - 55.