பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 துறவறவியல் குறிப்பிட்ட வாழ்நாளின் எல்லையை யாரும் கடக்க முடியாது. எமனிடத்திலிருந்து தப்பி நீங்கிக் குதித் தோடிப் பிழைத்தவர் இங்கே எவரும் இலர். நாளைக்கே 'தழீஇம் தழிஇம்’ எனச் சாப்பறை (சிர்வுமேளம்) கொட் டப்படலாம். எனவே, மிகவும் பெரும்பொருள் வைத்திருப் பவரே! உடனே பிறர்க்கு வழங்குவீராக. நாடோறும் புதிதாய்த் தோன்றுகிற கதிரவனை அளக்கும் படியாகக் கொண்டு ஒவ்வொருநாளும் எமனைவன் உம் வாழ்நாளேத் தானியமாக அளந்து உண்டுவருகிருன்; எனவே, எவரும் இவ்வுலகில் பிறந்திருப்பினும், நல்லறம் புரிந்து, பிறவா நிலை யெய்திய பெரியோர்போல அருள் உடையவராகுக ! 67 தாம் பெருஞ்செல்வர் என்றெண்ணித் தாம் செல்லப் போகும் மறுவுலகைப் பற்றி எண்ணுத அற்பரின் பெரிய செல்வம், இரவில் கரிய மேகத்தின் வாய்த் தோன்றிய மின்னல்போல் சிலகாலம் இருந்து, பின் வளரும்வழி முற்றும் அறக் கெட்டழியும். ஒருவன் தானும் உண்ணுதவனுய், விளக்கமான நற் பெயரை நிலைநிறுத்தாதவனுய், உயர்ந்த புகழ்ச் செயல் புரியாதவனுய், பிறர்க்கும் வழங்காதவய்ை, வீணே பொருளை வைத்துக் காத்திருப்பானே யாகில்,ஆ'ஆஅதனை இழந்துவிட்டான் என்றே எண்ணப்படுவான். 69 வானத்தை முட்டும் மலைநாடனே ! நல்லுடை உடுக்காமலும், நல்லுணவு உண்ணுமலும், தம் உடலை வருத்தியும், அழியாத நல்ல அறச்செயல்களும் செய்யாத வராயும், பிறர்க்கும் வழங்காமலும் பொருளைச் சிறுகச் சேர்த்து வைத்திருப்பவர் பின்னர் இழந்துவிடுவர். தேனேக் கூட்டில் கொண்டுவந்து சேர்க்கும் தேனிக்களே இதற்குச் சான்ரும். 70