பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 துறவறவியல் 8. இளமையின் நிலை யில்லாமை நல்லறிவினர் பின்னல் நரைதோன்றும் என முன்கூட் டியே உணர்ந்து இளமையிலேயே துறவு கொள்ளத் துணிந்தனர். குற்றம் நீங்காத-நிலையில்லாத இளமையை விரும்பி மகிழ்ந்து இறுமாந்திருந்தவர் பின்னர்த் தடி ஊன்றித் துன்பத்துடன் நடமாடுவர். 71 நண்பர்கள் நீங்கினர்; நல்லறிஞரும் நெருக்கம் குறைந் தனர்; மனைவி மக்கள் முதலானரின் அன்புப் பிணிப்புகளும் அவிழ்ந்துபோயின. இதனை உள்ளுணர்ந்து காண்க. வீணே உயிர் வாழ்வதால் என்ன நன்மை ஏற்படும் ? கட லில் மூழ்கும் கப்பலின் நிலைபோன்ற அழிவுத்துன்பம் இதோ வந்துவிட்டதே! 72 பேச்சு தளர்வுற்று, தடிஊன்றி, நடை சோர்ந்து, பற்கள் கழன்று விழுந்து, இவ்வுடம்பாகிய பண்டம் இழித்துரைச் கப்படும்வரையும் இல்லறத்திலேயே இருந்து காம வழி ஒழுகும் ஊனக்கண் உடையவர்க்கு, மறுமைக்கு அரணுன வீட்டு நெறி செல்லும் வழி இல்லை. உடல் கூனிக் குனிந்து தளர்ந்து தலைநடுங்கித் தடி ஊன்றிக் கீழே விழுந்து இறக்கும் தறுவாயிலுள்ள இம் முதியவளிடத்தும், நெஞ்சுறுதியில்லாத-காம மயக்கம் கொள்கின்ற மாந்தருக்கு, இவள் ஊன்றும் கைத்தடி, தம் தாய் ஊன்றிய தடிபோல் தெரியும்போது மனத்திற்குத் துன்பம் தரும். 74 எனக்குத் தாயா யிருந்தவள் என்னை இங்கே விட்டு விட்டு, தனக்குத் தாய் தேடி வேறு பிறவி எடுக்கச் சென்று விட்டாள்; அவளுக்குத் தாயானவளும் அவ்வாறே தாய் தேடிச் செல்கிருள் எனில், இவ்வுலக உயிர்கள் தாயோ தாய் என்று தாயைத் தேடிக்கொண்டு அலையும் எளிமை யுடையனவாம். 75