பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41 துறவறவியல் வேலன் (சாமியாடுபவன்) வெறியாடும் (சாமியாடும்) கொடிய கொலைக்களத்திலே (ஆட்டைக் கொல்லும் பலி பீடத்திலே), அவனது கையில் தளிரோடு கூடிய மணமிக்க மாலை முன்னுல் விளங்க, வெட்டப்படவிருக்கும் ஆடு அந்தத் தளிர்இலையை உண்டாற்போன்ற நிலையற்ற இளமையின் போலியின்பம் அறிவாளரிடம் இராது. 76 இளமையானது, குளிர்ச்சி பொருந்திய சோலையில்உள்ள பயனுள்ள மரங்க ளெல்லாம் பழங்கள் இற்று வீழ்ந்தாற் போன்றது. எனவே, மிகப் பெரிதும் வேல்போன்றஅழகிய கண்ணுடையவள் என்று இந்த இளம் பெண்ணை விரும் பாதிர்கள் மற்றபடி இவளும் பின்னர் உடல் கூனிக் குனிந்து கோலேயே கண்ணுகக் கொண்டு நடப்பாள். 77 வயது எத்தனை ஆகியுள்ளது ! பல்லின் வன்மை எப்படி ? (ஒரு முறை மட்டுமா அல்லது) இரு முறையும் உண்கிறீர்களா ? என்று முறைப்படி கேட்கப்பட்டுப் பிற ரால் உடல் உள்ளாராய்ச்சி செய்யப் படுவதால், உடல் உறுதியை ஒரு பொருளாக அறிவுடையவர் மதிக்கார். 78 முதிர்ந்த பழம் மரத்திலேயே இருக்க, கொடிய காற்றல், நல்ல இளங்காய் விழுந்து போவதும் உண்டு. எனவே, இப்போது நாம் இளையவராயுள்ளோம்; நல்லறம் புரிதலேப் பிறகு பார்த்துக் கொள்வோம் என்று கருதாமல், கைப் பொருள் இருக்கும் இப்பொழுதே மறைக்காமல் நல்லறம் செய்க. - 79 நாள் முடியும் ஆளைத் தேடி அலேயும் அருள் அற்ற எமன் ஒருவன் இருப்பதால், தோளில் எடுத்துச் செல்லும் கட்டுசோறு போன்ற நல்லறத்தைக் காலத்தோடு செய்து பிழையுங்கள் ! எமன், கருவைப் பிதுக்கித் தாய் அலறும் படிக் குழந்தையையும் கொண்டு செல்லுதலால், அவனது கபடு அறிந்து நடத்தல் நல்லது. 80