பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 துறவறவியல் 9. உடம்பின் நிலையில்லாமை மலேமேல் தோன்றும் முழு நிலாப்போல யான்ையின் பிடர் மேல் நிறுத்தப்பட்ட வட்ட வெண்குடைக்கீழ் அமர்ந்து சென்றஅரசர்களும்இறுதியில் இத்தரையில்இறந்துபட்டனர் என்று குறிப்பிட்டு எளிமையாய்ப் பேசப்படுகின்றனரே தவிர, இவ்வுலகில் இறவாமல் தப்பினவர் எவரும் இலர். 81 உள்ள வாழ்நாள் ஒவ்வொன்றையும் அளக்கும் அலகாக, ஒளிவீசும் கதிரவன் ஒருநாளும் வீணே தவருமல் தோன்றிக் கொண்டே யிருத்தலால், இவ்வுலகின்மேல் எவரும் நிலேத்திரார்; எனவே, வாழ்நாள் முடியுமுன் உலகோடு ஒத்து உதவி வாழ்க ! 82 மணஅரங்கு அதிர மனப்பறையாய் ஒலித்த இன்னியங்கள் (வாத்தியங்கள்) அப்போதே அங்கேயே அந்த மண மக்கட்கே மேற்கொண்டு பினப்பறையாய் முழங்குதலும் உண்டு என்று உணர்ந்து, மாட்சிமையுடைய பெரியோர் உள்ளம், பிழைத்து ஏகக்கூடிய நல்லற வழியினேயே அழுந்தப் பின்பற்றுமாம். 83 சாப்பறை அடிப்பவர் செத்த விடு சென்று முதலில் ஒரு சுற்று அடிப்பார்கள்; பின்னர்ச் சிறிதுநேரம் இருந்து இரண் டாவது சுற்று பறைகொட்டுவர்; பின்பு மூன்ருவது சுற்று அடிக்கும்போது, பிணத்தைத் துணியால் போர்த்து நெருப்புச் சட்டி எடுத்துக்கொண்டு, செத்தவரைச் சாகப் போகின்றவர் சுமந்து செல்வர். இத்தகைய வாழ்க்கை நன்ருே ? ஆராய்ந்து காண்க. 84 உறவினர் கூட்டமாய்க் கூடிக் கல்'என ஒலித்து அழுது புலம்ப, பிணத்தைச் சுமந்து சுடுகாட்டில் கொண்டு செலுத் துபவரைக் கண்டும், இவ்வுலகில் மணம் புரிந்துகொண்டு, இன்பம் உண்டு-உண்டு-உண்டு என்று நம்பும் மயக்க உணர்வுடையோர்க்கு, இன்ப நிலேயாமையைச் சாப்பறை யானது டொண் - டொண் - டொண்’ எனக் கொட்டி உணர்த்தும். 85