பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 துறவறவியல் தோலாகிய பைக்குள் இருந்து தொழில் மிகவும் செய்து உணவூட்டிய உயிராகிய கூத்தாடி உடலை விட்டு வெளியே புறப்பட்டு விட்டால் அந்த வெற்றுடலை நார்கட்டி இழுத்தும் போனல் என்ன ? நன்கு தூய்மை செய்து அடக்கம் செய்தால் என்ன? கண்டவிடத்தில் எறிந்தால் தான் என்ன? பலரும் பழித்தால்தான் என்ன? பெய்யும் மழையில் தோன்றி மறையும் குமிழிபோல் பல முறையும் தோன்றி அழியக்கூடிய ஒருவித உடம்பு இது என்று எண்ணி, உலகியல் தடுமாற்றத்தை ஒழிப்போம் என்று உணர்ந்து செயல்படும் திண்ணிய அறிவினரை ஒப்பவர் இந்த நீண்ட உலகில் யார் உளர் ? 87 உடம்பானது, மலைமேல் காணப்படும் மேகம்போல் சிறிது நேரம் தோன்றி மற்று அங்கேயே நிலையாமல் நீங்கிவிடக் கூடியது; எனவே, உடலை உறுதியாகப் பெற்றிருப்பவர், தாம் பெற்றுள்ள அவ்வுடம்பால் தகுந்த நல்லறப் பய நாடிக்கொள்க. 88 இதோ இப்போதுதான் நின்றுகொண் டிருந்தான் - பின்னர் அமர்ந்தான்-பின்பு படுத்தான்-பின் தன்.உறவினர் அலறி அழ இறந்தேபோய்விட்டான் என்று வாழ்க்கைநிலை பேசப்படுதலால், உடலானது புல்நுனியிலுள்ள பனிநீர் போல் நிலையற்றது என்று உணர்ந்து, இப்போதே-ஆம்இப்போதே அறச்செயல் புரிவீராக ! 89 மாந்தர்கள், கேளாமலேயே உறவினராய்த் தாமாக வந்து வீட்டில் பிறந்து. கூடு மரத்திலேயே தங்க ஒன்றும் சொல்லாது வெகு தொலைவு பறந்து சென்றுவிடும் பறவை போல, தம் உடலைச் சுற்றத்தார்க்கு விட்டு ஒன்றும் சொல்லாமலேயே பிரிந்து போய்விடுகின்றனர். 0