பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47 துறவறவியல் 10. அறத்தின் வலிமையை வற்புறுத்தி அறிவித்தல் முற்பிறப்பில் செய்த அறத்தால் (தவத்தால்) இன்பம் துய்த்து இப்பிறப்பில் அறம் செய்யாதவர்கள், அடுத்த பிற வியில், இவ் வீட்டில் உள்ளவரே நன்கு வாழ்பவராவர் என ஒரு வீட்டை அண்ணுந்து பார்த்துத் தாம் உள்ளே 'புக முடியாதவராய் வெளிக்கடைவாயிலைப் பிடித்துக்கொண்டு மிகவும் வருந்தி நிற்பர். - 91 அற்ப மனமே ! நாம் வளர்ச்சியுற வேண்டும் ; ஆதலின் செல்வத்தை விரும்பி அறத்தை மறந்து விடுவோம் என்று கருதி, பொருளுக்காக ஒயாது நின்று முயன்று வாழ்கிரு யென்ருலும், நின் வாழ்நாட்கள் இதோ சென்று விட்டனவே! இனி நீ செய்யப்போவதைக் கூறுக. 92 அறிவிலி பழைய திவினைப் பயனுகிய துன்பம் வரின், வெப்பமாய்ப் பெருமூச்சு விட்டு மனம் சோர்வான். எனவே, அதனைப் பழவினைப் பயன்என்று அறிந்து தெளிந்தவரே, தடுமாற்றத்தின் எல்லையைக் கடந்து நீங்கிக் கடைத் தேறுவர். - 93 பெறுதற்கரிய நல்லுடம்பைப் பெற்ற நற்பயனல் பெரிய அறப்பயனேயும் மிகவும் செய்து வைத்துக்கொள்வீராக உடலானது, கரும்பு தரும் சாறுபோல் பின்னர் அறப்பயனை மிகவும் அளித்து, மற்று அக்கரும்பின் சக்கைபோல் தான் அழிந்துவிடும். 94 காலத்தோடு கரும்பை ஆலையில் இட்டு ஆட்டி வெல்லச் கட்டி பெற்றவர், பின் சக்கை தீயில் பொருந்தி எரியும் போது அங்கே துன்பம் உறமாட்டார்; அதுபோல, வருந்தி உழைத்து உடம்பில்ை அறப்பயன் சேர்த்துக்கொண்டவர் எமன் வரும்போது வருந்துவதில்லை. 95