பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51 துறவறவியல் 11. உடம்பின் தூய்மை யற்ற தன்மை உடம்பிலே ஓர் ஈயின் சிற்களவு தோலின் ஒரு பகுதி கழன்ருலும், அதைக் கொத்தாதபடி காக்கை ஒட்டுவதற்கு ஒரு கோல் வேண்டும்; எனவே, மாந்தளிர் நிறமும் இளமை யும் உடைய அழகிய பெண்ணே என்று பெண்களை நோக்கிப்பிதற்றும் பெரிய மனிதர்கள்'உடம்பு அற்பமான ஓர் ஒதுக்கிடம் என்பதை அறியார்போலும் ! 101 உடம்பானது, தோலாகிய போர்வைக்குமேலும் பல துளைகளை உடையதாய்ப் பொய்த் தோற்றத்தை மறைக்கும் மேற்போர்வைத் துணியால் பொலிவுடையதாய்க் காணப் படுகிறது; ஆதலின், மேற்போர்வையால் பொய்ம்மையை மறைக்காமல் காமமும் பேசாமல் உட்புறம் வெளிப்புற மாகும்படி பையைத் திருப்பிப் பார்ப்பதுபோல் அவ்வுடலைத் திருப்பிப் பார்த்தால் உண்மை விளங்கும். 102 இவ்வுடம்பு எப்போதும் உண்ணும் செயலால் உறுதி பெறக்கூடியது (அதாவது, சோற்ருல் அடித்தபிண்டம்) என்னும் உண்மையை உணர்ந்து பெரியவர்கள் வெளியழகு செய்வதைக் கைவிட்ட இவ்வுடலாகிய செத்தையின் இழி நிலை, தாம்பூலம் உண்டு தலை நிரம்ப மலர் அணிந்து பொய்யழகு செய்வதால் மறைந்து விடுமோ ? 103 கண்ணின் உள்நீரை எடுத்துவிடின் பனை நுங்கைத் தோண்டியதுபோல் தெரியும் அக் கண்ணின் உண்மை நிலையை உணர்ந்து நன்னெறியில் நடக்கும் நான், பெண் களின் கண்களை, தெளிந்த நீரில் உள்ள குவளை மலர் போன்றன-துள்ளும் கயல் மீன் போன்றன-வேல் போன் றன-என்றெல்லாம் கண்ணற்ற அற்பர்கள் பிதற்றி மயக் குவதால் உறுதி தளர்வேனே ? 104 யாரும் காணும்படி சுடுகாட்டில் உதிர்ந்து சிந்திக் கிடச் கும் பல்லாகிய எலும்பைப் பார்த்து நல்வழி நடக்கும் நான் பெண்ணின் பல் முல்லை மொக்கு போன்றது-முத்து போன் றது-என்றெல்லாம் பிதற்றுகிற கல்லாத அற்பர்களின் மயக்கவுரையால் மனம் தளர்வேனே ? 105