பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 துறவறவியல் குளிர்ந்த பூமாலை சூடிய அழகிய பெண் எனப்படுபவள் குடலும் முளையும் இரத்தமும் எலும்பும் தொடர்கின்ற நரட பும் தோலும் நடுநடுவே யுள்ள தசையும் கொழுப்பு நிண மும் ஆகிய இவ்வுடற் பகுதிகளுள் எது என்று குறிப்பிடத் தக்கவளோ ? 106 ஊத்தைகள் ஊறி வெறுக்கத்தக்க ஒன்பது துளையிடங் களிலும் கிளறி மலக்குழம்பு தளும்பும் உடலாகிய குடத்தை மேலே முடியுள்ள வழவழப்புத் தோலில்ை கண்ணிற்கு அழகெனக் கொண்டு, பேரழகு பொருந்திய தோளை உடை யவளே-அணிந்த அழகு வளைய லுடையாளே என்றெல் லாம் மூடன் பிதற்றுவான். 107 உடம்பாகிய பண்டத்தின் உண்மைநிலை உணராதவர் அணிந்துள்ள சந்தனத்தையும் மாலையையும் பார்த்துப் பாராட்டுகின்றனர். இவர்கள், முடைநாற்றமுடைய உடப் பாகிய வண்டி உயிராகிய அச்சு முரிந்து இற்று விழுந்த பின், வலிய பெட்டைக்கழுகும் ஆண்கழுகும் பிணத்தை நெருங்கி யிழுத்துக் குத்தியுண்பதைக் கண்டதில்லை போலும் ! - - 108 இடுகாட்டில் இட்ட இறந்தவர் தலைகள், பார்ப்பவ உள்ளம் அஞ்சும்படி, உள்குழிந்து ஆழ்ந்துள்ள கண் களுடன் தோற்றமளித்து, இறவா திருப்பவரை நோக்கி 'நல்லறம் பேணி நல்வழியில் நில்லுங்கள்! இவ்வுடலின் இயல்பு இத்தகையதுதான்!” என மிகவும் நகைத்து எச்சரிக்கின்றன போலும்! 10: உயிர் போனவரின் வெள்ளைத் தலை, கண்டார் அஞ்: நகைத்து, இன்பத்தில் இறுமாந்திருப்பவரை எச்சரித்து, குற்றத்திலிருந்து நீக்கும். குற்றம் நீங்கியவர் அது கண்( இவ்வுடலின் தன்மை இத்தகையது என்று உணர்வதால் தம்மை யொருபொருளாக மதித்துத்தருக்கடைவதில்லை.11