பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறம் 54 12. துறவு விளக்குப் புகவிருள் மாய்ந்தாங் கொருவன் தவத்தின் முன் நில்லாதாம் பாவம்;-விளக்குநெய் தேய்விடத்துச் சென்றிருள் பாய்ந்தாங்கு நல்வினே தீர்விடத்து நிற்குமாம் தீது, 1 11 நிலையாமை, நோய், மூப்புச், சாக்காடென் . றெண்ணித் தலையாயார் தங்கருமஞ் செய்வார்;-தொலைவில்லாச் சத்தமும் சோதிடமும் என்ருங் கிவைபிதற்றும் பித்தரின் பேதையார் இல். 112 இல்லம், இளமை, எழில்வனப்பு, மீக்கூற்றம், செல்வம், வலியென் றிவையெல்லாம்-மெல்ல நிலையாமை கண்டு நெடியார் துறப்பர்; தலையாயார் தாமுய்யக் கொண்டு. 113 துன்பம் பலநாள் உழந்தும் ஒருநாளே இன்பமே காமுறுவர் ஏழையார்;-இன்பம் இடைதெரிந் தின்னமை நோக்கி மனேயா(று) அடைவொழிந்தார் ஆன்றமைந் தார். 114 கொன்னே கழிந்தன் றிளமையும்; இன்னே பிணியொடு மூப்பும் வருமால்;-துணிவொன்றி என்னெடு சூழா தெழுநெஞ்சே ! போதியோ கன்னெறி சேர நமக்கு. 115