பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57 துறவறவியல் மனைவியிடம் மாட்சிமையான குணம் இல்லாமையுடன் மக்களைப் பெறும் மலர்ச்சியும் இல்லையென்ருலும் கணவன் அவளைக் கைவிட முடியாதாதலின், இப்படியான வறட்டுச் சூழ்நிலையின் காரணத்தால், கற்றறிந்த் பெரியோர் முற்கால நூற்களிலே திருமணத்தைக் 'கடி' என்னும் சொல்லால் குறித்தனர். (கடி என்னும் சொல்லுக்கு, திருமணம்' என்றும், விலக்குதல்’ என்றும் பொருள்கள் உண்டு) 116 ஊக்கத்துடன் தாம் மேற்கொண்ட நோன்புகள் குலையும் படி, தாங்க முடியாத துன்பங்கள் தலைநீட்டி வரினும், அவற்றை விலக்கி நோன்பை நிலைநிறுத்தும் வலிமை யுடையவரே நல்லொழுக்கம் போற்றும் அழகிய தவத்தோ ராவர். . . 117 பிறர் தம்மை இகழ்ந்து பேசியதைத் தாம் பொறுத்துக் கொள்வதல்லாமல், மேலும், இவர் எம்மை இகழ்ந்த தீவினைப் பயல்ை, மறுமையில் நரகத்தின் எரிவாயில் விழுந்து வருந்துவாரே என்று இரக்கப்படுவதும் துறவியரது கட்டமையாம். 118 மெய், வாய், கண், முக்கு, காது எனப் பேர்கூறப்படும் ஐம்பொறிகளின் வாயிலாய் உண்டாகும் விருப்பையும் ஆவு லையும் தன்கைவயமாய்க் கலங்காமல் தடுத்துக் காத்துச் செலுத்தும் வலிமை உடையவன் தவருது வீடு (முத்தி) பெறுவான். - - 119 அறிவிலார், துன்பங்களே மேலிடக் கண்டும்துறவுகொள் ள்ாராய் இன்பத்தையே விரும்பி எதிர்பார்ப்பர். மேலோர் இன்பம் வருந்தோறும் மற்று அதில் மிக்குள்ள துன்பத்தை நோக்கி, இன்பத்தை விரும்புதல் செய்யார். 120