பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59 துறவறவியல் 13. கோபம் கொள்ளாமை நம்மை மதித்து நன்கு நடப்பவரும் நடக்கட்டும் மதிக் காமல் நம்மை மிதித்து நடப்பவரும் நடக்கட்டும் அற்ப ஈயுங்கூட, நம் தலைமேல் மிதித்து ஏறி அமர்வதால், அவ் வுண்மை யுணர்ந்தவர், சுடும் சினம் கொள்ளாது பொறுத் தலே நல்லது. 121 அடிபெயர்க்கவும் முடியாமல் நெருக்கி மிகவும் இழிவு நேர்ந்தபோதும் எடுத்த நற்செயலை முடிக்கும் மனவுறுதி யுடையவர், நீங்காத பெருமைக்கு உரிய தமது இனிய உயிரைக் காக்காமல், பிறரால் துன்பம் கண்டபோதெல்லாம் வெறுத்து உயிரை விடுவரோ ? 122 ஒருவன் தன் வாயை அடக்காமல் திறந்து பேசும் தீய பேச்சு, பின்னர் விடாமல் அவனையே சுட்டுவருத்துவதால், இடைவிடாது ஆராய்ந்து அமைந்த கேள்வி யறிவுடைய பெரியோர் எப்போதும் காயும் கடுஞ் சொற்களைச் சினந்து சொல்லார், . 123 மேலானவர், தமக்கு நிகரற்ற கீழோர் பண்பற்ற பேச்சு பேசில்ை, அதற்காக வியர்த்துச் சினங் கொள்ளார். கீழோரோ, அப்பேச்சினைத் தம் உள்ளத்தால் அலசி ஆராய்ந்து ஊரார் கேட்கும்படி நெடுகச் சென்று பேசித் துள்ளிக் குதித்துத் தூணிலே முட்டிக்கொள்வர். 124 இளைஞனது அடக்கமே சிறந்த அடக்கம்; மேன்மேலும் கிளேக்கும் பொருள் வருவாய் இல்லாதவன் கொடுக்கும் கொடையே உயர்ந்த கொடைப் பயனும்; எவற்றையும் நொறுக்கவல்ல வலிமையும் திண்மையும் உடையவன் பொறுக்கும் பொறுமையே சிறந்த பொறுமையாகும். 125