பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65 அரசியல் பார்க்குங்கால், ஒடம் செலுத்துபவன் பழங்குடியைச் சேர்ந்த இழிகுலத்திவயுைள்ளர்ன் என்று யாரும் இகழமாட் டார்கள்; அவன்துணையாக ஆற்றைக் கடந்து போவது போன்றதே, இழிகுலத்தா குயினும் நல்ல நூற்களைக் கற்றவன் துணையாக நற்கருத்துக்களைக் கற்றுக்கொள்ளு தலுமாம் அறிவாயாக ! 136 குற்ற மற்ற பழைய நூற் கேள்வியும் நற்பண்பும் உடையவரும் பகைமை யில்லாதவரும் அறிவுவன்மை யுடையவருமாகிய கற்றவர்கள் குழுவில் கூடிப் பேசி மகிழ்வதனினும், அகன்ற விண்ணில் தேவர் வாழும் உயர்ந்த நகரம் இன்பம் தருமாயின் ஆண்டு சென்று பார்க்கலாம். - - 137 ஒலிக்கும் குளிர்ந்த கடல்துறை நாடனே கற்றுத் தெளிந்தவரது நட்பு, கரும்பை நுனியிலிருந்து அடி நோக்கித் தின்பதுபோல் போகப்போக இனிக்கும். பண்பும் அன்பும் இல்லாத அறிவிலிகளின் நட்போ, கரும்பை நுனியைவிட்டு அடியிலிருந்து நுனிநோக்கித் தின்பதுபோல் இனிமை குறைந்துவரும். 138 புதிய மட்பாண்டம், பழம் பெருமையும் நல்ல நிறமும் உடைய பாதிரிப்பூவைப் பெற்று அதன் மணத்தைத் தன் னிடமுள்ள தண்ணிருக்குக் கிடைக்கச் செய்தாற்போல, கல்லாதவர்களும் கற்றறிந்தவருடன் கலந்து பழகினல் அவர்தம் நல்ல அறிவு நாடோறும் கிடைக்கப் பெறுவர். 9 13 ஒருவர் அளவு மிக்க படிப்பினேகள் அமைந்த அறிவு நூற்களைக் கல்லாமல், வெற்று உலகியல் நூற்களை மட்டும் படிப்பதெைலல்லாம், கல கல வென்று வீணே கத்தும் அளவேயன்றி, நன்மை பெற்றுத் தடுமாற்றம் நீங்கும் அளவு உண்மை யுணர்ந்தவ ராகார். 140