பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 70 16. மேன்மக்கள் அங்கண் விசும்பின் அகல்நிலாப் பாரிக்கும் திங்களும் சான்ருேரும் ஒப்பர்மன் ;-திங்கள் மறுவாற்றும்; சான்ருேர் அஃ தாற்ருர்; தெருமந்து தேய்வர் ஒருமா சுறின். 151 இசையும் எனினும் இசையா தெனினும் வசைதீர எண்ணுவர் சான்ருேர்;-விசையின் நரிமா உளம்கிழித்த அம்பினில் தீதோ - அரிமாப் பிழைப்பெய்த கோல். 152 நரம்பெழுந்து நல்கூர்ந்தார் ஆயினும் சான்ருேர் குரம்பெழுந்து குற்றம்கொண் டேருர்;-உரம்கவரு உள்ளமெனும் நாரில்ை கட்டி உளவரையால் செய்வர் செயற்பா லவை. 153 செல்வழிக் கண்ணுெருநாள் காணினும் சான்றவர் தொல்வழிக் கேண்மையின் தோன்றப் புரிந்தியாப்பர்; நல்வரை நாட! சிலநாள் அடிப்படின் கலவரையும் உண்டாம் கெறி. 154 புல்லா எழுத்தின் பொருளில் வறுங்கோட்டி கல்லா ஒருவன் உரைப்பவும் கண் ஒடி நல்லார் வருந்தியும் கேட்பரே மற்றவன் பல்லாருள் நாணல் பரிந்து. 155