பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73 அரசியல் கரும்பைப் பல்லால் கடித்தும் கணுக்கள்' சித றும்படி ஆலேயில் இட்டு நொறுக்கியும் உரலில் இட்டு இடித்தும் எப்படி சாறு எடுத்தாலும்,அது, இனியசுவையுடையதாகவே யிருக்கும். உயர்குடிப் பிறந்தவரும், தம்மை யொருவர் பழிபடத் திட்டிச் சென்ருலும் தம் வாயால் இழித்துப் பேசாது இனிக்கவே பேசுவார். . 156 குற்றமற்ற நல்லறிவினர் திருடார்; கள்குடியார்; விலக்க வேண்டியவற்றை விலக்கி நீக்குவர்; பிறரை மட்டப்படுத்தி இகழ்ந்து பேசார்; தவறியும் வாயால் பொய் பேசார்; வாழ்வு சரிந்தால் துன்புறுதல் இலர். . . , 157 பிறரது மறைச் செய்தியை (இரகசியத்தை) ஒட்டுக் கேட்பதில் செவிடகிையும், முறையறிந்து ஒழுகி, அயலான் மனைவியைத் திய நோக்குடன் காண்பதில் கண் குருடனகி கியும், பிறரைப் பற்றிப் புறங்கூறித் தியன. பேசுவதில் ஊமையாகியும் ஒருவன் ஒழுகுவானேல், அம்மேலோனுக்கு யாதோர் அறமும் அறிவுறுத்த வேண்டியதில்லை. 158 நற்பண்பில்லாதவர், தம்மிடம் ஒருவர் பலநாளும் வந்தால், ஏதேனும் விரும்பிவருகிருர் என்று இகழ்ச்சியாக நடத்துவர். மேன்மக்களோ, ஒருவர் எதையும் விரும்பி வரினும் நல்லதே என்று மகிழ்ந்து, காணுந்தோறும் பெருமையுடன் நடத்துவர். 159 நற்குடியிற் பிறந்த நல்லாருடன் சேர்ந்தால், பொன்னும் மணியும் உடைய சுரங்கத்தை அடைந்ததுபோல் ஆகாதோ ஆகும் இஃதறியாதார், இழிந்தவர் பின்னே சென்று. இவர் பெருஞ்செல்வம் உடையவர் என்று உறுதியாகப் பற்றிப் (பல்லிளித்து) வ்ாழ்வர். -