பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83 அரசியல் 19. பெருந்தன்மை வறுமையால் ஒன்றும் உதவமுடியாது போக, இளமை நெடுந்தொலைவு விட்டு நீங்கியதால் காதல்கொண்டிருந்த பெண்டிரும் கருத்து செலுத்தாது விட்டனர்; எனவே, நாம் இன்னும் காதலித்து வாழ்வோம் என்னும் ஆவலைத் துறந்து மேல்நிலைக்குச் செல்லமுயல்வதே சிறந்த செயல் பாலும் ! 181 இல்லறத்தைச் சார்ந்திருந்ததால் இன்புற்ருேம் . ஈண்டு எல்லாம் நிறைவுற்ருேம்-என்று கருதிப் பின்வருவதை மறந்து நடப்பர் அறிவிலிகள். அந்தவாழ்வு உள்ளதுபோல் தோன்றி நிலைக்காது போகும் என உணர்ந்த அறிஞர்கள் என்றும் துன்புறுதல் இல்லை. - 182 மறுவுலக வாழ்விற்கு விதையாகிய நல்லறத்தை மயக்கமின்றிச் செய்து குறைவுபடாமல் நீவிர் அறிவுடை யவராய் வாழ்வீராக! (ஏனெனில், இவ்வுடல்)நின்றவிடத்தில் நின்றபடியே நிலைமை மாறிப் போகும்; மற்றும் ஒரு காரணமும் தெரியாமலேயே பல்வகைச் சிக்கல்களும் உண் டாகும். + . 183 மழை யற்ற காலத்தும் ஊற்று நீருடைய கேணி சிறுக இறைத்து உண்டாலும் ஊர் முழுவதையும் காக்கும் என்று கூறுவர். பிறர்க்குக் கொடுக்கும் கடமையையுங் கூட, செல்வம் குறைந்த போதும் உயர்ந்தோர் செய்வதுபோல், செல்வம் உண்டானபோதும் மற்ற கீழ்மக்கள் ஆற்றுதல் இல்லை. 184 மிகுந்த நீரைத் தந்து உலகினரை உண்பித்து, நீர் அற்றபோதும் தோண்டும் ஊற்றுக்குழியில் நீர் ஊறி உதவும் ஆற்றைப் போல, உயர்ந்தோர் செல்வத்தைப் பலர்க்கும் பகிர்ந்தளித்து, செல்வம் வற்றிய போதும் சிலருக்காயினும் உதவிபுரிந்து செய்யவேண்டிய நற் கடமைகளைச் செய்வர். - 185