பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85 அரசியல் பெரிய மலைநாட்னே 1 பெரியோரது குற்றம், பெரிய காளைமாட்டின்மேல் போட்ட சூட்டைப்போல் நன்கு தெரியும். அந்தப் பெரிய காளையைக் கொன்றதுபோன்ற கொடுமைகள் புரியினும் இழிந்தவர்மேல் ஒரு பழியும் தெரியாது மறைபடும். 186 சிறுமை பொருந்திய நற்பண்பு இல்லாதவரிடம் ஒட்டி உறவாடும் வரையும் துன்பமேயாம். கலக்கத்திற்குரிய தீமைகளே விளையாட்டாகவும் செய்ய விரும்பாத நல் ல்றிஞரிடம் கொண்ட பகையும் பெருமை பெறும். 187 மென்மைத்தன்மையுடைய நல்லவரிடம் மென்மைத்தன் மையும், அது கடந்து நடக்கும் பகைவரிடம் எமனும் அஞ்சும்படியான கடுமை கலந்த வன்மையும், எல்லாமே வஞ்சகமாய் நடப்பவரிடம் மிகவும் வஞ்சகத் தன்மையும், நல்லவரிடம் நன்மையின் உயர் எல்லேயும் காட்டுவீராக ! - . 188 கலக்கம் இல்லாத திண்ணியர், ஒருவன் தம்மைக் கடுகடுக்கச்செய்து கொடிய கோள் சொல்லி மயக்கிலுைம், மன மாறுபாடு ஒருசிறிதும் இன்றி, விளக்கில் எரியும் விளக்கமான கடரேபோல் விளங்கித் தூய்மையுடைய உள்ளத்தராய்த் தோன்றுவர். - 189 முன்னுல் உண்ணத்தக்க சிறப்புணவை நாடோறும் பிறர்க்கு அளித்துவிட்டு, பின் எஞ்சியுள்ள உணவை உயர்ந்தோர் உண்ணுவர். அங்ங்னம் உணவுண்பது, காமம் வெகுளி மயக்கம் என்னும் மூன்று குற்றங்களையும் போக்கி முடிந்த அளவெல்லாம் அவரைத் துயரத்தினின்றும் விலக்கிக் காக்கும். 190