பக்கம்:நாலு பழங்கள்.pdf/10

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


4 நாலு பழங்கள்

அடுத்த வாரம் வந்தது. மறுபடியும் சபை கூடி யது. இப்பொழுது பெரும் கூட்டம் கூடியது. அரச குமாரி கேட்ட அதிசயமான பழங்களை யார் கொண்டு வரப் போகிருர்கள் என்று பார்ப்பதற்காக அவர்கள் கூடியிருந்தார்கள். -

அரசனும், அரசியும்,குருநாதரும் சபையில் வந்து அமர்ந்தார்கள். அரசகுமாரியும் சபைக்கு வந்தாள். முன்னல் சபை கூடியபோது வந்திருந்த அரசகுமா ரர்களில் பலர் வரவில்லை. சில பேர்களே வந்திருந்தார் கள். அவர்களும் வேடிக்கை பார்க்க வந்தார்களே ஒழிய, அரசகுமாரி சொன்ன நிபந்தனைகளை நிறை வேற்றவில்லை.

அப்பொழுது அரசன், "என் பெண் சொன்ன பழங்களை யாராவது கொண்டு வந்திருக்கிரு.ர்களா?” என்று கேட்டான். - -

சபையில் அமைதி நிலவியது. எந்த அரச குமாரன் எந்தப் பழங்களைக் கொண்டு வந்திருக் கிருன் என்று தெரிந்து கொள்வதற்கு, வந்திருந்த எல்லோரும் ஆவலாக இருந்தார்கள்.

அப்பொழுது ஒர் அரச குமாரன் எழுந்தான். "நான் அரசகுமாரி சொன்ன நான்கு பழங்களையும் கொண்டுவந்திருக்கிறேன்' என்ருன். .

எல்லோரும் அவனையே பார்த்தார்கள். அரச குமாரி எழுந்தாள் பழமானலும் காயாகவே. இருக்கும் பழம் எது?” என்று கேட்டாள். - -

உடனே அந்த அரசகுமாரன் பழுத்து முதிர்ந்து உதிர்ந்த தேங்காய் ஒன்றை எடுத்து வைத்தான்.