பக்கம்:நாலு பழங்கள்.pdf/14

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
8
நாலு பழங்கள்

வில்வித்தையில் சிறந்தவன்; நகுலன் குதிரைகளை ஓட்டுவதில் வல்லவன். சகாதேவன் பெரிய ஞானி.

இந்தப் பாண்டவர்கள் பன்னிரண்டு ஆண்டுகள் வனவாசம் செய்யும்படி நேர்ந்தது. அந்தக் காலத்தில் ஒரு நாள் துர்வாச முனிவர் அவர்களிடம் வந்தார். "தர்மராஜாவே, நான் காட்டில் தவம் செய்கிறேன். எனக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்ய யாராவது இருந்தால் நல்லது என்று நினைக்கிறேன். என் மனம் அறிந்து வேலை செய்யும் ஒருவன் வேண்டும்" என்று தர்மரைப் பார்த்துச் சொன்னார்.

தர்மர், "நாங்கள் ஐந்து பேர் இருக்கிறோம். எங்களுக்குள் யாரைத் தாங்கள் விரும்பினாலும் வருகிறோம்" என்றார்.

துர்வாசர் வீமன் பலசாலியாக இருப்பதைப் பார்த்து அவனையே அழைத்துக்கொண்டு சென்றார். வீமனும் நல்ல காரியம் செய்ய வாய்ப்புக் கிடைத்தது என்று. அவருடன் போனான்.

"முனிவர் பெருமானே, நான் எந்த விதமான பணிகளைச் செய்யவேண்டும்?" என்று வீமன் கேட்டான்.

"நான் காலையில் எழுந்தவுடன் பல் துலக்க வேண்டும். அதற்குப் பல்குச்சி கொண்டு வந்து தர வேண்டும். பிறகு நீராடவேண்டும். அதற்கு மலையடி வாரத்திலிருந்து தண்ணீர் கொண்டுவர வேண்டும். ஜபதபங்கள் முடிந்த பிறகு நான் உண்ணுவதற்குப் பழங்களைப் பறித்துக்கொண்டுவந்து தரவேண்டும்" என்றார்.