பக்கம்:நாலு பழங்கள்.pdf/18

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
12
நாலு பழங்கள்

கொண்டு தவம் செய்ய உட்கார்ந்து விடுவார். மறுபடியும் மூன்று மாதம் கழித்துக் கண்ணைத் திறப்பார். அப்பொழுதும் அந்த மரத்திலிருந்து ஒரு பழம் விழும். அதை உண்டார். இப்படியே ஒவ்வொரு மூன்று மாதமும் நடந்து வந்தது.

இந்த முறை அவர் கண் விழிக்க வேண்டிய நாள் வந்தது. அடுத்த நாள் அவர் கண்விழித்துப் பழத்தை உண்ண வேண்டும். கண் விழிக்க வேண்டியதற்கு முதல் நாள் அங்கே ஒரு வேடன் வந்தான். மரத்தில் இருக்கும் பழத்தைப் பார்த்தான். அவன் நாக்கில் நீர் ஊறியது. அந்த மரத்தின் மேல் ஏறி அந்தப் பழத்தைப் பறித்துத் தின்றுவிட்டு வந்த வழியே போனுன்.

மறுநாள் முனிவர் கண்ணைத் திறந்தார். அண்ணாந்து மரத்தைப் பார்த்தார். அங்கே பழம் இல்லை. அவருக்கு அதிகப் பசியாக இருந்தது. யாரோ அதைப் பறித்துத் தின்றிருக்க வேண்டும் என்று தெரிந்து கொண்டார். பசியோடு அவருக்குக் கோபமும் வந்தது. "அந்தப் பழத்தைத் தின்றவனுக்குக் கடுமையான வயிற்றுவலி உண்டாகட்டும்" என்று சாபம் இட்டார். நீராடி விட்டு வந்து வேறு பழமுள்ள மரத்தைத் தேடிச் சென்று அதிலிருந்த பழத்தைத் தின்று பசியாறினர். ஆனாலும் அவருக்குத் திருப்தி உண்டாகவில்லை. வழக்கப்படி தாம் அமர்ந்திருந்த மரத்தின் அடிக்கு வந்து கண்ணை மூடித் தவம் செய்ய ஆரம்பித்தார்.

பழத்தைத் தின்ற வேடன் அந்தக் காட்டில்