இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
அந்த அரசனுடைய மனைவிக்கு ஒரு தம்பி இருந் தான். அவளுக்கு அவனே எப்படியாவது மந்திரி ஆக்கிவிடவேண்டும் என்று ஆசை. அரசனுக்கு மிகவும் வயசான மந்திரி ஒருவர் இருந்தார். அவர் மிகவும் நல்லவர்; புத்திசாலி: உலக அநுபவம் மிக்கவர். o
எவ்வளவு நாளைக்கு இந்தக் கிழட்டு மந்திரியை வைத்துக் கொண்டிருப்பீர்கள்? அவருக்கு ஒய்வு கொடுத்துவிட்டு என் தம்பியை மந்திரியாக்குங்கள்' என்று அரசி நச்சரித்து வந்தாள்.