பக்கம்:நாலு பழங்கள்.pdf/25

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
19
என்ன தண்டனை கொடுப்பது?

வாயில் கல்கண்டு கொடுங்கள்" என்று அந்த மந்திரி சொன்னார்.

அரசியின் முகம் மலர்ந்தது.

"ஏன் அப்படிச் சொல்கிறீகள்? இவள் தம்பி அவனைத் தண்டிக்கும்படி அல்லவா சொல்கிறான்?" என்று அரசன் கேட்டான்.

"அரசே, உங்களை இரவில் அவ்வளவு தைரியமாக வந்து உதைப்பதற்கும் உமிழ்வதற்கும் வேறு யாருக்கு முடியும்? அரண்மனையில் கட்டுக்காவல் இருக்கும் போது கொடியவன் யாராவது வர முடியுமா? அப்படி. ஒருவன் வந்தால் நீங்கள் உடனே எல்லாரையும் எழுப்பிக் கட்டி உதைக்கச் சொல்ல மாட்டீர்களா?" என்று மந்திரி கேட்டார்.

"அப்படிச் செய்யவில்லை என்பது உண்மைதான். ஆனால் அவனுக்குத் தண்டை. கொலுசு போட வேண்டும் என்று சொல்கிறீர்களே! ஏன்?" என்று அரசன் கேட்டான்.

"உங்கள் குழந்தைக்கு அப்படித்தானே செய்ய வேண்டும்? அவன்தானே அப்படியெல்லாம் செய்தான்? அப்படிச் செய்ததனால் உங்களுக்கும் அரசிக்கும் எவ்வளவு சந்தோஷம் உண்டாகியிருக்கும்!" என்றார் மந்திரி.

"சரியாகச் சொன்னீர்கள்!" என்று அரசியே மகிழ்ச்சியுடன் சொன்னாள். அதோடு, "இந்த முரடனை என் தம்பி என்று சொல்லவே எனக்கு வெட்கமாக இருக்கிறது. இவனுக்கு மந்திரிப் பதவி ஒரு கேடா?" என்று உணர்ச்சியுடன் இரைந்தாள்.