பக்கம்:நாலு பழங்கள்.pdf/29

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


குழந்தையும் திருடர்களும் 23

"ஆமாம், ஆந்தைக்கு விழி பெரியது. அ விழித்தால் பயமாக இருக்கும்.” .

'ஆந்தை விழிக்கிறது’ என்று சொல்லிப் பார்த் துக் கொண்டது, குழந்தை. - r நரி பார்த்திருக்கிருயோ? அம்மாவின் கேள்வி இது.

'இல்லையே!” ‘நாய் மாதிரிதான் இருக்கும். ஆனல் வால் புஸ் புஸ் என்று இருக்கும். நாயை விட வேகமாக ஒடும்.’’ .

"இங்கே நரி இருக்கிறதோ?” “இங்கே யெல்லாம் இருக்காது. காட்டில்தான் இருக்கும்.’’ ;

'ஓ! நரி ஒடும்; வேகமாக ஒடும்; இல்லையா?”

"ஆமாம்.’’ - - *நளி ஓடுகிறது' என்று குழந்தை சொல்லிப் பார்த்தது. -

அதோடு அம்மா அன்று சொல்லிக் கொடுப் பதை நிறுத்திக் கொண்டாள். -

குழந்தை அம்மா சொல்லிக் கொடுத்த நான்கு விஷயங்களைத் திருப்பித் திருப்பி யோசித்து அந்த நாலு பிராணிகளையும் பற்றியே சொல்லிக் கொண்டி ருந்தது. தென்னமரம் நிற்கிறது. பெருச்சாளி சுவ ர்ைப் பறிக்கிறது. ஆந்தை விழிக்கிறது. நரி ஒடு கிறது” என்று மனப் பாடம் செய்து கொண்டது. -