பக்கம்:நாலு பழங்கள்.pdf/31

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


குழந்தையும் திருடர்களும் 25

இப்போது குழந்தை, ஆந்தை விழிக்கிறது’ என்றது. அந்தத் திருடனுக்கு உண்மையில் பயம் தோன்றியது. "நாம் செய்கிறதை அந்தக் குழந்தை கவனித்து விட்டுத்தான் சொல்கிறது என்று நினைத் தான். - -

மறுபடியும் குழந்தை, ஆந்தை கொட்டக் கொட்ட விழிக்கிறது” என்று சொல்லியது.

"ஓ! நாம் ஏமாந்து விட்டோம். யாரோ குழந்தைக் குரலில் பேசுகிரு.ர்கள். நம்மைக் கண்டு கொண்டிருக்க வேண்டும்’ என்று எண்ணித் திருடர் கள் ஒடத் தொடங்கினர்கள்.

அப்போது அந்தக் குழந்தை, நரி ஒடுகிறது’ என்று சொன்னது அவர்கள் காதில் விழுந்தது.

சந்தேகமே இல்லை. நாம் இங்கே இருக்கக் கூடாது. ஒடிப் போகத்தான் வேண்டும்' என்று எண்ணி அவர்கள் ஓடி விட்டார்கள். நரி வேகமாக ஒடுகிறது” என்று மறுபடியும் அந்தக் குழந்தை சொன்னது, திருடர்களுக்குப் பொருத்தமாக இருந் தது. .

அந்தத் திருடர்களால் அந்த வீட்டில் திருட முடியாமல் போயிற்று. х

(ஒரு நாடோடிக் கதையைத் தழுவியது.)