பக்கம்:நாலு பழங்கள்.pdf/33

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
27
நாக மாணிக்கம்

அந்த மலையின் மேல் ஓர் ஆலமரம் இருக்கிற தென்றும், அதில் பல நாகப் பாம்புகள் இருக்கின்றன என்றும், அதன் உச்சியில் ஒரு நாக மாணிக்கம் இருக்கிறதென்றும் மக்கள் சொல்லிக் கொண்பார்கள்.

அந்த ஊர் அரசனுக்கும் இந்தச் செய்தி தெரிய வந்தது. அவனுக்கு அழகான பெண் ஒருத்தி இருந்தாள். அவளுக்குத் திருமணம் ஆக வேண்டும். "மலையின் மேல் உள்ள நாக மாணிக்கத்தை யார் கொண்டு வந்து தருகிறார்களோ, அவனுக்கு என் பெண்ணைக் கல்யாணம் செய்து கொடுப்பேன்" என்று அரசன். பறை அறையச் செய்து தெரிவித்தான். அந்த அழகான அரசகுமாரியைக் கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டும் என்று அரச குமாரர்கள் பலர் ஆசைப்பட்டார்கள். அரசன் போட்ட நிபந்தனையை நிறைவேற்றினால்தானே அவள் கிடைப்பாள்? சில பேர் அந்த மலையின் மேல் ஏறிக் காட்டை அடைந்ததும் அங்கே இருந்த சிங்கம், புலியைக் கண்டு பயந்து திரும்பி விட்டார்கள்.

தன் பெண்ணுக்குச் சிறந்த வீரனாகிய ஒருவன் கணவனாகக் கிடைக்கவில்லையே என்று அரசன் வருந்தினான். கண்ணன் அந்த மலையில் ஏற முடியவில்லையே என்று எண்ணி வருந்தினான்.

ஒரு நாள் அந்த ஊருக்கு ஒரு சாமியார் வந்தார். எந்தச் சாமியாரைக் கண்டாலும் அவரை வணங்கி ஆசி பெறுவது கண்ணன் வழக்கம். ஆகவே அந்தச் சாமியாரைக் கண்டதும் அவன் வணங்