பக்கம்:நாலு பழங்கள்.pdf/34

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
28
நாலு பழங்கள்

கினான். பழங்களை வாங்கிக் கொண்டு வந்து தந்தான். அவனுடைய நல்ல குணத்தைக் கண்ட சாமியார்' மனம் மகிழ்ந்து, "தம்பி, உனக்கு என்ன வேண்டும்? கேள், தருகிறேன்" என்றார்.

"சாமி, இந்த மலையின்மேல் ஏறி உச்சியில் ஆலமரத்தில் உள்ள நாகமாணிக்கத்தை எடுத்து வர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஆனால் மலையிலுள்ள காடுகளில் புலியும், சிங்கமும், வேறு மிருகங்களும் இருக்கின்றன. ஆலமரத்தில் கொடிய விஷமுள்ள பாம்புகள் இருக்கின்றனவாம். அவைகளை யெல்லாம் தாண்டிக்கொண்டு போய் அந்த நாசு மாணிக்கத்தை எப்படி எடுப்பது? தாங்கள் ஏதாவது வழி சொல்லித்தந்தால் அப்படியே செய்வேன்" என்று கண்ணன் சாமியாரிடம் வேண்டிக் கொண்டான்.

சாமியார் சிறிது திருநீறு அளித்து அதைப் பூசிக் கொள்ளச் சொன்னார். பிறகு ஒரு தடியையும் நீளமான கயிறு ஒன்றையும் அவனிடம் கொடுத்தார். "இந்தத் தடியினால் காட்டு மிருகங்களை அடித்துக் கொன்று விடலாம், இந்தக் கயிற்றில் சுருக்குப் போட்டுச் சிறிய மிருகங்களையும் பாம்புகளையும் கொன்று விடலாம்" என்று சொன்னார். கண்ணன் அந்த இரண்டையும் வாங்கிக் கொண்டான்.

சாமியார் சொன்ன தைரியத்தின் மேல் அவன் அந்த இரண்டையும் எடுத்துக் கொண்டு மலையின் மேல் ஏறலானான். காட்டுக்கு வந்தவுடன் ஒரு சிங்கம் கனைத்துக் கொண்டு வந்தது. கண்ணன் பயப்