பக்கம்:நாலு பழங்கள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாக மாணிக்கம்

29

படாமல் சாமியாரை நினைத்துக்கொண்டு தன் கையில் இருந்த தடியினால் அதை அடித்தான். அது அங்கேயே உயிரற்று விழுந்து விட்டது. பிறகு "உர்'" என்று ஒரு புலி சீறிக்கொண்டு வந்தது. சிங்கத்தைக் கொன்றதனால் தைரியம் அடைந்த கண்ணன் அதையும் தடியால் அடித்தான். அதுவும் இறந்தது. அப்பால் ஓர் ஓநாய் வந்தது. கண்ணன் கயிற்றில் சுருக்குப் போட்டு அதன் கழுத்தில் வீசி இழுத்தான். சுருக்கு இறுகி ஓநாய் வாயைப் பிளந்துகொண்டு பிணமாக விழுந்தது. அடுத்தபடி ஒரு கரடி வந்தது. அதைத் தடியால் அடித்து விழப்பண்ணினான். யானை வந்தது. அதையும் அடித்தான். இவ்வாறு எதிர்ப் பட்ட மிருகங்களையெல்லாம் அடித்து விழச்செய்து காட்டைக் கடந்து மலையின் மேல் ஏறினான்.

மலை உச்சியை அடைந்து அங்கே இருந்த ஆலமரத்தைப் பார்த்தான். அதில் பெரிய பெரிய நாகப் பாம்புகள் தொங்கிக்கொண்டிருந்தன. கண்ணனைக் கண்டவுடன் அவை புஸ், புஸ் என்று சீறின. கண்ணன் பயப்படவில்லை. சிலவற்றைத் தடியால் அடித்துக் கொன்றான். சிலவற்றைக் கயிற்றால் சுருக்குப் போட்டுப் பிணமாக்கினான். பாம்புகளைக் கொல்வதில் நெடு நேரம் கழிந்தது. அதனால் அவனுக்குக் களைப்பாக இருந்தது. சுற்றுமுற்றும் பார்த்தான். அருகில் மாமரம், ஆப்பிள் மரம் எல்லாம் இருந்தன். அங்கே ஒரு குளம் கூட இருந்தது. அந்தக் குளத்தில் இறங்கி நீராடினான். உடம்பிலே தெம்பு உண்டாயிற்று. மரத்தின் மேல் ஏறிப் பழங்களைப் பறித்துத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாலு_பழங்கள்.pdf/35&oldid=1084379" இலிருந்து மீள்விக்கப்பட்டது