பக்கம்:நாலு பழங்கள்.pdf/37

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
31
நாக மாணிக்கம்

கத்தை வாங்கிக்கொண்டான். அதைப் பார்த்துப் பார்த்து மகிழ்ந்தான்.

கண்ணன் நாக மாணிக்கத்தைக் கொண்டு வந்து விட்டான் என்ற செய்தி ஊர் முழுவதும் பரவியது. அவனைப் பார்க்க எல்லாரும் வந்து கூடினார்கள்.

அரசன் தன் மகளைக் கண்ணனுக்கு மிகவும் விமரிசையாகக் கல்யாணம் பண்ணிக் கொடுத்தான். அந்த நாகமாணிக்கத்தைத் தன் பெண்ணுக்கே சீதனமாகக் கொடுத்தான்.

கண்ணனுக்கு மாணிக்கம் போன்ற அரசகுமாரி கிடைத்தாள்; அவன் வீரச்செயல் செய்து எடுத்து வந்த நாகமாணிக்கமும் கிடைத்தது.
நாலு பழங்கள்.pdf