பக்கம்:நாலு பழங்கள்.pdf/43

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அதிசயப் பெண் 37

"காய்கறி சோறு எல்லாவற்றையும் படைக்கும் இலைதான் ஆதார வஸ்து. சாப்பிட்டால் அதை எறி யாமல் என்ன செய்வது?’ என்று சுகுமாரன் சொன் ஞன்.

வேகாத இலையையும் வெட்டின காயையும் வெந்த கல்லையும் நான் கலந்து வைப்பதை நீங்கள் பார்த்ததுண்டோ?’ என்று அவள் கேட்டாள்.

'தினமுந்தான் செய்கிருய், வேகாத இலை வெற். றிலே; வெட்டின காய் அடைக்காயாகிய பாக்கு; வெந்த கல் சுண்ணும்பு; இந்த மூன்றையும் நீ கலந்து தராவிட்டால்தான் எனக்குப் பிடிக்காது” என்று சுகுமாரன் சந்தோஷத்துடன் சொன்னன்.

"அந்தக் குழம்பைப்பற்றி என்ன சொல்கிறீர் கள்?’ என்று வித்தியாவதி அடுத்த கேள்வி கேட் டாள். -

"அது சந்தனக் குழம்பு என்று எனக்குத் தெரி யாதா? வேகாத கட்டை சந்தனக்கட்டை, அதன் குழம்பு சந்தனக் குழம்பு. அதனை என்மேல் நீ ஊற்றி ல்ை எனக்கு மகிழ்ச்சிதான் உண்டாகும். -

"இரண்டு மாட்டின்மேல் தூங்குவதைப் பார்த் திருக்கிறீர்களா?' என்று கடைசிக் கேள்வியைக்கேட் டாள் வித்தியாவதி. .

"நான்கூடத்தான் கால்மாடு, தலைமாடு ஆகிய இரண்டு மாட்டின்மேல் துரங்குகிறேன். நீ தூங்கு வது அதிசயம் அல்லவே! என்று சுகுமாரன்