பக்கம்:நாலு பழங்கள்.pdf/46

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


40 நாலு பழங்கள்

பேராசிரியர்களும் அவர்களும் நெருங்கிப் பழகுவார் கள். மனங்கலந்து பேசி இனிமையாகப் பொழுது போக்குவார்கள். அங்கே ஒரு நாள் பல ஆசிரியர்கள் சேர்ந்து அமர்ந்து விநோதமாகப் பேசிக்கொண்டிருந் தார்கள். இந்த ஊரில் டபீர் தெரு என்று ஒன்று இருக்கிறது. அதற்கு ஏன் அந்தப் பெயர் வந்தது? டபிரென்று அங்கே ஏதாவது வெடித்ததா? அல்லது வேறு காரணத்தால் வந்ததா?’ என்று ஒருவர் கேட் டார். - -

"டபீர் ஸ்வாமி என்ற ஒரு பெரியவர் இருந் தார். அவருடைய பெயரை இட்டு வழங்குகிருர்கள். அநேகமாக அவர் மகாராஷ்டிரராக இருந்திருப் பாரென்று தோன்றுகிறது' என்று வேறு ஓர் ஆசிரி யர் விடை கூறினர். - -

முதலில் கேள்வி கேட்டவர் தொடர்ந்து, 'அப் படியானல், அந்தப் பெயர் அவருக்கு மாத்திரம் எப் படி வந்தது?’ என்று வினவினர்.

அந்த வினவிற்கு ஒருவரும் பதில்சொல்லவில்லை. சிறிது நேரம் கழித்து அங்கிருந்த ஆர். வி. ரீநிவா சையர் என்ற பேராசிரியர் சிறிது கனைத்துக் கொண்டு, நான் சொல்லட்டுமா?’ என்று கேட் டார். கேட்கும்பொழுதே அவர்பால் தோன்றிய புன் னகை அவர் ஏதோ வேடிக்கையாகச் சொல்லப் போகிருர் என்பதைக் குறிப்பித்தது.

சொல்லுங்கள், கேட்கலாம் என்று ஆசிரியர் யாவரும் ஒரு முகமாகக் கேட்டார்கள்.