முன்னுரை
குழந்தைகளுக்குக் கதை சொல்லுவதென்பது எல்லா நாடுகளிலும் உள்ள வழக்கம். வயசான மூதாட்டிகளும், கிழவர்களும் தம் பேரன் பேத்தி களுக்குக் கதை சொல்லி உற்சாகப்படுத்தி வருவார் கள். அதனால் அந்த முதியவர்களுக்கும் மகிழ்ச்சி: குழந்தைகளுக்கும் கொண்டாட்டம். குழந்தைகளின் கதைகளில் அதிசயங்களும், அற்புதங்களும் இருந் தால் அவற்றை அவர்கள் நன்முக ரசிப்பார்கள். அப்படிச் செய்ய முடியுமா? அது இயற்கைக்கு விரோதம் அல்லவா?’ என்று கேட்கமாட்டார்கள். உலகில் உள்ள மொழிகளில் குழந்தைகளுக்காகவே வழங்கும் மோகினிக் கதைகளும், உவமைக் கதை களும் உள்ளன. தமிழிலும் பல காலமாக வழங்கி வரும் நாடோடிக் கதைகளில் குழந்தைகளுக்கு உரிய வையும் உண்டு. - . . . . . . . . .
இந்தச் சிறிய புத்தகத்தில் நாகைக் கற்பனை செய்து அமைத்த கதைகளும் பழைய நாடோடிக் கதைகளைத் தழுவிய கதைகளும் உள்ளன. நாமும் குழந்தையாக இருந்திருப்பதல்ை குழந்தைகளின் உள்ளத்தை நம்மால் அறிய முடிகிறது.
இந்த வகையில் வேறு சில கதைப் புத்தகங் களையும் வெளியிடலாம் என்று எண்ணியிருக்கிறேன்.
'காந்தமலை’ - கி. வா. ஜகந்நாதன் சென்னை-28 7–3—81