பக்கம்:நாலு பழங்கள்.pdf/50

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


44 நாலு பழங்கள்

டாருக்கோ அவர் ஏதோ பொறுப்புள்ள அரண்மனை உத்தியோகத்தை ஏற்றுக் கொண்டிருக்கிருர் என்ற கெளரவ புத்தி உண்டாயிற்று. இவர் என்ன செய் கிருர்?’ என்று அறிய எண்ணிய யாரோ சிலர் அவர் ஏகாக்கிர சித்தத்தோடு வேலை செய்வதைப்பார்த்து, குறுக்கிட விரும்பாமல் போய் விட்டார்கள். அவர் உத்தியோகம் யாதொரு தடையுமின்றி இவ்வாறு நடைபெற்று வந்தது.

ஒரு நாள் அரண்மனையில் ஒரு தங்கப் பாத்திரம் காணுமல் போயிற்று. எங்கெங்கோ தேடிப் பார்த் தார்கள்; கிடைக்கவில்லை. யார் திருடினர்கள் என்று தெரிந்துகொள்ள முடியவில்லை. பல வகையில் ஆராய்ச்சிசெய்து விசாரித்தபோது, அன்று மாலையில் அதை யாரோ ஒருவன் எடுத்துப் போயிருக்கிருன் என்று தெரிய வந்தது. அரண்மனைக்கு அடிக்கடி வந்து போகும் பழக்கமுடைய அவனைச்சந்தேகித்துச் சோதனை போட்டார்கள். பண்டம் அகப்படவில்லை.

யாரோ ஒருவர், இந்தத்துப்புத்துலங்க வேண் டுமானல் கடைசியாக ஒரு வழி இருக்கிறது. இதோ இந்தச் சாலையில் ஒரு மகாராஷ்டிரர் இருக்கிரு.ர். அவர் ஒரு பைத்தியக்கார உத்தியோகம் பார்த்து வருகிரு.ர். அவரிடமுள்ள குறிப்புக்களைப் பார்த்தால், நமக்கு ஏதாவது உளவு கிடைக்கலாம்” என்று சொன்னர். அரண்மனை உத்தியோகஸ்தர்கள் அதை யும் பார்த்து விடலாம் என்று எண்ணி அந்த மகா ராஷ்டிர கனவானுடைய உத்தியோகசாலைக்கு வந்தார்கள்.