பக்கம்:நாலு பழங்கள்.pdf/51

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
45
டபீர் சுவாமி

அவர்களை அந்தக்கனவான் வரவேற்றார். பிறகு அவர்கள் விரும்பியபடி தம்முடைய தினக் குறிப்புக்களைக் காட்டினார். 'ஒரு பிரயோஜனமும் இல்லாமல் வேலையற்றுப் போய் இந்த மனிதன் இப்படி எழுதிக் குவித்திருக்கிறானே!' என்று அவர்கள் எண்ணி நகைத்தனர். பிறகு தங்கப் பாத்திரம் களவு போன நாளில் எழுதியவற்றைப் பார்த்தார்கள். அன்று காலையிலிருந்து இரவு வரையில் அந்தச் சாலையில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் இருந்தன. பின்வரும் குறிப்பு. அவர்கள் கண்ணில் பட்டது.

"மாலை ஆறரை மணி, ஒரு குட்டையான மனிதன் தன் மேல் வேஷ்டியில் எதையோ மறைத்தபடியே வந்தான். அரண்மனையிலிருந்து வந்திருக்கலாம். எதிரே உள்ள சாக்கடைக்கு அருகில் உட்கார்ந்தான். உடனே 'டபீர்' என்ற சத்தம் கேட்டது; அடுத்த நிமிஷம் அவன் எழுந்து போய் விட்டான்."

இதை வாசித்தவுடன் அரண்மனையிலிருந்து வந்தவர்கள் சாக்கடைப் பக்கம் போய் அதற்குள் 'டபீர்' என்று விழுந்த பஸ்து எதுவாயிருக்கலாமென்று தேடினார்கள்.

என்ன ஆச்சரியம்! எதைத் தேடி அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தார்களோ, அந்தப் பண்டமே. அதற்குள் இருந்தது. 'அரண்மனையிலிருந்து திருடிக் கொண்டு வந்தவன் அப்போதைக்கு இங்கே போட்டு வைத்திருக்கலாம். திருட்டுவிசாரணை நடந்து ஓய்ந்த பிறகு எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணிப்