பக்கம்:நாலு பழங்கள்.pdf/55

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அரச குமாரன் சோதனை 玺数

"என் முதல் தெய்வத்துக்கு.” 'உன் தகப்பனருக்கா?”

'அவர் என்ன செய்கிருர்?’’ 'ஒன்றை இரண்டாக்குகிருர்!’ "மண் கட்டியை உடைத்து உழுகிருரோ?”

ஆம்.’’ - 'எந்த இடத்தில் உழுகிருர்?’ - போனல் வராத புன்செய்க்கு அடுத்த நன் செய்யிலே.' -

"ஓகோ சுடுகாட்டுக்கு அடுத்த நிலத்திலா?” "ஆம், ஐயா!' என்று மரியாதையுடன் விடை யளித்தாள் அவள். கொஞ்சம் கஞ்சி சாப்பிடுகிறீர் களா?' என்றும் கேட்டாள். -

“சரி” என்று ஒப்புக்கொண்டான் ராஜ குமாரன். - - -

கஞ்சிச் சட்டியின் மேல் மூடியிருந்த கலயத்தை அவள் எடுத்தாள். அதில் அப்படியே கஞ்சியை ஊற்றுகிருளா என்று கவனித்தான் ராஜகுமாரன். அதை முதலில் கழுவி விட்டுப் பிறகு அதில் கஞ்சியை ஊற்றி அவனிடம் கொடுத்தாள், ராஜகுமாரனுக்குச் சந்தோஷம் உண்டாகி விட்டது. இந்தப் பெண் நமக்கு மனைவியாக வாய்த்தால் மிகவும் நன்முக இருக்கும்’ என்ற ஆசை அவனுக்கு அப்போது உண் டாயிற்று.

"உன் வீடு எங்கே இருக்கிறது?’ என்று கேட் L-Tóðs.

நா. ப 4.