பக்கம்:நாலு பழங்கள்.pdf/56

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
50
நாலு பழங்கள்

"பாலுக்கும் நூலுக்கும் நடுவிலே, சுட்ட கூரையும் சுடாத மதிலும் உள்ள வீடு, எங்கள் வீடு" என்றாள் அவள்.

"பால்காரன். வீட்டுக்கும், தறிகாரன் வீட்டுக்கும் நடுவில், ஒட்டு வில்லை வேய்ந்த வீடு இவள் வீடு. அதைச் சுற்றிச் செடி நிறைந்த வேலி இருக்கும்" என்று உணர்ந்து கொண்டான் இளவரசன்.

அவன் உடனே அவள் வீட்டுக்குப் போய் அவளுடைய தாயோடு பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தான். அவள் வீட்டில் பெண் கொள்ளவேண்டும் என்று வந்திருப்பதாகவும், தான் மிகவும் பணக்காரன் என்றும் சொன்னான். அப்படிப் பேசிக் கொண்டிருந்த போது வயலுக்குக் கஞ்சி கொண்டு போன அமுதவல்லி திரும்பி வந்துவிட்டாள்.

"மாமி, மாமி, உங்கள் பெண்ணை இன்று சமையல் செய்யச் சொல்லுங்கள். நான் பணம் தருகிறேன். வேண்டியதை வாங்கி, வேண்டியபடி செய்யச் சொல்லுங்கள். ஒரு பிள்ளைக்காரியைக் கறி பண்ணி, பாவாடைக்காரியைக் குழம்பு பண்ணி, பாண்டியன் தேவியை ரசம் பண்ணி எனக்கு விருந்திட வேண்டும்" என்றான்.

அமுதவல்லி, "அப்படியே செய்கிறேன்" என்று சொல்லி, வேண்டிய காய்கறிகளைத் தன் தாயைக் கொண்டு வாங்கி வரச் சொன்னாள்; சமையல் செய்து பரிமாறினாள்.

ஒரு தாறு மாத்திரம் போடும் வாழையின் காயைக் கறி பண்ணியிருந்தாள். கத்திரிக் காயைக்