பக்கம்:நாலு பழங்கள்.pdf/8

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


2 நாலு பழங்கள்

வைப்பேன். அதில் யார் தேறுகிருர்களோ அவரையே கல்யாணம் பண்ணிக் கொள்வேன்’ என்று அவள் சொன்னுள். -

'எப்படி நீ சோதனை பண்ணுவாய்?’ என்று அவள் தந்தையாகிய அரசன் கேட்டான். - 'எனக்கு நாலு பழம் வேண்டும். அந்தப் பழங்கள் இப்படி இருக்க வேண்டுமென்று சொல்லுவேன். அவற்றை யார் கொண்டு வந்து தருகிருரோ, அவரையே நான் மனப்பேன்’ என்று அவள் சொன்னுள்.

'என்ன பழம்' என்று அரசன் கேட்டான்.

'நாலு வகையான பழங்களை நான் சொல்லு கிறேன். அவற்றைக் கேட்டுக்கொண்டு ஒரு வாரத்தில் கொண்டுவந்து கொடுத்தால் அவரைக் கெட்டிக் காரர் என்று தெரிந்து கொண்டு திருமணம் செய்து கொள்வேன்' என்று அவள் சொன்னள்.

ஒரு நாள் ராஜசயை கூடியது. தனக்கு உரிய கணவனைத் தேர்ந்தெடுக்க அரசகுமாரி அந்தக் கூட்டத்தைக் கூட்டினள். பல தேசத்து அரசகுமாரர் களும் வந்திருந்தார்கள். அரசனும் அரசியும் அவர் களுடைய குருவும் வேறு பல பெரிய மனிதர்களும் சபையில் கூடியிருந்தார்கள். - -

அரசன் தன் புதல்வியைப் பார்த்து. "உனக்கு எந்த வகையான பழங்கள் வேண்டுமென்பதைச் சொல். இங்கே வந்திருக்கும் அரச குமாரர்கள் இன். னும் ஒரு வாரத்தில் அந்தப் பழங்களைக் கொண்டு