உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

용 நிசப்த சங்கீதம்

யாகவும் வித்தியாசமாகவும் உணரச் செய்துவிடுமோ என்ற அச்சமும் தயக்கமும் மனத்தளவிலேயே தடுக்க நேர்ந்து, அதைச் செய்யாமல் தவிர்த்துக்கொண்டு பழையபடியே கூப்பிட்டிருக்கிறான் அவன். கேழ்வரகுப் பானையில் கையை விட்டுத் துழாவிப் பார்த்தபின், -

'இந்தாடா முத்துராமு! நல்லவேளையா இருந்: திச்சு...நேத்தே தீர்ந்து போயிரிச்சோன்னு நெனைச்சேன்.

என்று ஒர் அழுக்கடைந்த பத்து ரூபாய் நோட்டை. நீட்டினாள் அவனுடைய தாய். அவளுடைய சேமிப்பின் கடைசிப் பகுதியாக இருக்கவேண்டும் அது. ரூபாயை வாங்கிக் கொண்டு மதுரைக்குப் புறப்பட பஸ் ஸ்டாண்டை நோக்கி நடந்தான் முத்துராமலிங்கம். பக்கத்திலே வைகை அணைக்கட்டு வந்தாலும் வந்தது, ஆண்டிப்பட்டியிலிருந்து மேற்கே போகவும் சரி, கிழக்கே மதுரை போகவும் சரி, பஸ் கிடைப்பது மிக மிகச் சிரமமானதாகிவிட்டது. சமயங்களில் சைக்கிளில் தேனி வரை போய் அப்புறம் அங்கிருந்து மதுரைக்குப் பஸ் பிடிக்க வேண்டிவந்தது.

நல்லவேளை. அன்று அப்படி நேரவில்லை. உடனே பஸ் பிடித்து மதுரை ஊருக்குள் இறங்காமல்செக்கானூரணி தாண்டியதும் ஞாபகமாக யூனிவர்ஸிடி ஸ்டாப்பிலேயே இறங்கிக் கொண்டு புரொவிஷனல் சர்டிபிகேட்டையும், வேறு சில நன்னடத்தைச் சான்றிதழ்களையும் வாங்கி முடிக்கப் பகல் ஒரு மணிக்குமேல் ஆகிவிட்டது.

அதை முடித்துக்கொண்டு அவன் மதுரை ஊருக்குள் போய்ச் சில கல்லூரி நண்பர்களைச் சந்தித்தான். அவனைப் போலவே தமிழ் இலக்கியத்தில் எம்.ஏ. தேறிய பலர் எந்த வேலைக்குப் போவதென்று புரியாமல் திகைத்துக் குழம்பிக் கொண்டுதான் இருந்தார்கள். சிலர் எம்.ஃபில். சேருவதற்கு, அப்ளிகேஷன் போடத் தயாராகிக் கொண்டிருந்தார்கள். முத்துராமலிங்கம் எம்.ஃபில்லுக்காக மேலும் ஒராண்டு வீணாக்க விரும்பவில்லை. அவனுடைய குடும்பநிலை மட்டுமின்றி மனநிலையும் அதற்கு ஏற்றதாக இல்லை. அப்போது. -