பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 99

அதெல்லாம் இல்லே...செய்வாரு...உனக்கு வேலை கெடைக்கும்.’’ - -

"ஜாதி ஊரு பேரெல்லாம் விசாரிக்கிறாரே...'

"எல்லாரும் பொதுவாகக் கேக்கிறதைத்தானே கேட்டாரு.' . .

"இதெல்லாம் அநாகரிகம். தப்புன்னு பேசிக்கிட்டே இதைப் பற்றிப் பூடகமா விசாரிக்கிற ஆசாரக் கள்ளனு. களை விட நேரடியாகவே என்ன ஜாதின்னு கேட்கிறவனே தேவலாம்.' . . .

"ஜாதி, கட்சி, பிரதேசம், மொழி இதையெல்லாம்

வச்சுத்தான் இன்னிக்கு உலகத்திலே எல்லாமே நடக்கு துப்பா.'

மறுநாள் காலை வைரவனைப் பார்க்கக் கொண்டிச் செட்டித் தெருவுக்குப் போனான் முத்துராமலிங்கம்.

அங்கே போக வழி, பஸ் நம்பர் முதலிய விவரங்களைச் சின்னியிடம் கேட்டுக்கொண்டு வந்திருந்தான் அவன்.

அவன் போய்ச் சேர்ந்தபோது கடையில் வைரவன் இல்லை. இளம்பெண் ஒருத்தி யாரோ வாடிக்கைக் காரருக்குப் புத்தகங்களை எடுத்துக் கொடுத்துக் கொண் டிருந்தாள். மற்றோர் இளம்பெண் டெலிஃபோனில் யாருடனோ குழைந்து கொஞ்சிக் கொஞ்சிப் பேசிக் கெர்ண் டிருந்தாள். -

அலமாரிகளிலும், புத்தக அடுக்குகளிலும் பல் ஸ்டாண்டுகள், ரயில் நிலைய பிளாட்பாரங்களில் விற்பனை யாகும் தலைப்புகளே அதிக்மாகத் தென்பட்டன. ஒடிப் போன ஒய்யாரி, தேடிப் போன சிங்காரி, சீரழிந்தவளின் சிறுகதை, போன்ற புத்திகங்கள் கொச்சை கொச்சையான மலிவு வர்ண அட்டைகளோடு பல்லிளித்தன.

அங்கே ஓடாமலும், தேடாமலும், சீரழியாமலும் ஒரு - புத்தகத்துக்குக் கூடத் தலைப்பு இல்லை. பஸ் நிலைய