பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 - நிசப்த சங்கீதம்

விற்பனைகளுக்கும், இரயில் நிலைய விற்பனைகளுக்கும். சில்லறை விற்பனை செய்யும் மொத்த விற்பனைக் கூட மாகத் தெரிந்தது அது. - .

ஒடுவதற்கும், தேடுவதற்கும், சீரழிவதற்கும் பஸ்கள், இரயில்கள். அவசியமென்று கருதியோ என்னவோ புத்தகங்கள் எல்லாமே அப்படித் தலைப்புக்களோடு தான் விளங்கின. - -

காலை பத்தரை மணி சுமாருக்கு வைரவன் கடைக்கு வந்தார். ஆனால் அவருக்கு முத்துராமலிங்கத்தை ஞாபக மில்லை. அதற்குள் மறந்து போயிருந்தது. அவனாகச் சொல்வி நினைவுபடுத்திவிட வேண்டியிருந்தது.

அப்படி நினைப்பூட்டியது அவருக்குப் பிடிக்கவே யில்லை. சின்னியின் பெயரைக் கேட்டதுமே முகத்தைச் சுளித்துக் கொண்டார் அவர். -

"உங்க நண்பர் சின்னி என்று முத்துராமலிங்கம் கூறிய சொற்கள் அவருக்கு எரிச்சலூட்டியிருக்க வேண்டும்.

14

முதல் நாளிரவுச் சந்திப்பையும் - சின்னியையும் அவன் நினைவூட்டியது அவருக்குப் பிடிக்கவில்லை என்று புரிந்தது. முத்துராமலிங்கத்தை உறுத்துப் பார்த்தார் வைரவன். பார்வையில் சுமுகத்தன்மை அறவே கலவாத கடுகடுப்புத். தெரிந்தது. அந்தக் கடுகடுப்போடு அவனை வினவினார் அவர். - - - السلام ; : - . . - . . . 'என்ன சொன்னே...? காதிலே சரியா விழலே. இன்னொரு வாட்டி சொல்லப்பா.' - -

உங்க நண்பர் சின்னி அனுப்பிச்சாருன்னேன்" - என்று. சற்று இரைந்த குரலிலேயே சொன்னான் அவன்.

'கண்ட கண்ட ஆளுங்கள்ளாம் ரெண்டு நாளு எங்க யாவது பார்த்துப் பேசிட்டாலே உடனே நண்பர் அடறாங்க...' - - -