நா. பார்த்தசாரதி 101
செலுத்தவும் முடியாமல் அடக்கவும் முடியாமல் தமுட்டுக் கோபத்தோடு அவர் சிரமப்படுவதை முத்துராம லிங்கம் கவனித்தான். .
" உனக்கு என்ன வேலை தெரியும்?’’
உங்ககிட்ட என்ன வேலை கிடைக்கும்னு தெரிஞ்சா அது என்னாலே முடியுமா முடியாதான்னு நான் பதில் சொல்லிடலாம்.'
'இப்ப நான் அவசரமா வெளியிலே யோகணும். நீ நாளைக்கி இதே நேரத்துக்கு வரமுடியுமா?"
பதில் பேசாமல் தலையாட்டிவிட்டு ஒரு தாளில் தன்னுடைய படிப்பு - தகுதி முதலிய விவரங்களை எழுதி அவரிடம் கொடுத்துவிட்டு ஒன்றும் பேசாமல் அங்கிருந்து வெளியேறினான் அவன். "குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு என்பது போலச் சின்னியிடம் ஏதோ ஒர். அவசரத் தில் எப்படியோ ஒரு சந்தர்ப்பத்தில் கொடுத்துவிட்வார்த்தைக்காக அவர் பூசி மெழுகுவது முத்துராம விங்கத்துக்குப் புரிந்தது. பட்டனத்தில் யாரிடமிருந்தும் எதற்கும் தெளிவான பதில் கிடைக்காததை அவன் தொடர்ந்து கவனித்துக்கொண்டுதான் வந்தான். தீர்க்க முடியாதவற்றையெல்லாம் த விர்க்க முயலுவதும், தீர்மானிக்க முடியாதவற்றை எல்லாம் பூசி மெழுகுவதுமாக நாகரிகமாய் உடையணிந்த மனிதர்களே நகரம் முழுவதும் நிறைந்திருப்பதாகத் தெரிந்தது. யாருக்கும் எதிலும் வைராக்கியமோ, அக்கறையோ, முனைப்போ தெரிய வில்லை. . - -- . .
நேரே திரும்பிப் போய்ச் சின்னியிடம் நடந்ததைச் சொன்னான் முத்துராமலிங்கம். சின்னி அதைக் கேட்டுக் கோபப்படவோ, அதிர்ச்சியடையவோ இல்லை. சிரித்துக் கொண்டே முத்துராமலிங்கத்துக்குப் பதில் கூறினான் அவன் : - ʻʻ «
நி-7