பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 02 நிசப்த சங்கீதம்

"ராத்திரி இங்க வர்ரப்பத் தெரியற வைரவன் வேறே. மத்த நேரத்து வைரவன் வேறே சரி. விட்டுத்தள்ளு. நான் வேற எடத்துல்ே உனக்கு ஏற்பாடு பண்றேன். வா... சாப்பாட்டை முடிச்சிக்கிட்டுப் போகலாம்...'

-எதற்கும் அதிர்ச்சியோ, ஆத்திரமோ அடையாத சின்னி ஒரு ஞானியைப்போல் அந்தக் கணத்தில் முத்துராம விங்கத்துக்குத் தோன்றினான். குறையும் பலவீனமும் உள்ள மனிதர்களைப் பொறுத்துக் கொள்ளவும், ஏற்கவும் முடியாமல் தவிக்கும் தன்னையும் மனிதர்கள் குறையும் பலவீனமுமுள்ளவர்களாக இருப்பதுதான் இயல்பு என்று புரிந்து பொறுத்துக்கொண்டு அதைஏற்கத் தயாராயிருக்கும் அந்தப் பாமரனையும் ஒப்பிட்டான் அவன். வாழ்க்கை அனுபவங்களிலேயே பழுத்துச் சின்னி வேதாந்தியாகி விட்டானோ என்றுகூட வியப்பாயிருந்தது அவனுக்கு.

"இவ்வளவு பேரையும் இவ்வளவையும் நீ பொறுத்துக் கிட்டு அட்ஜஸ்ட் பண்றது பெரிய காரியம் சின்னி...'

"பெரிசோ, சிரிசோ...இங்கேதான் காலந்தள்ளணும்இவர்களோடதான் காலந்தள்ளனும் ... மொறைச்சிக்கிட் டுப் போயிடமுடியாது' என்றான் அவன். ஏதோ ஒரு விதத்தில் உலகை அந்தப் பாமரன் தன்னைவிடச் சரியாகவே கணித்திருக்கிறானோ என்று எண்ணினான் முத்துராம லிங்கம். கெளடியா மடத்துக்கு எகிரே இருந்த ஒரு மிலிடரி ஹோட்டலில் பகல் உணவை முடித்துக்கொண்டு ஒர் ஆட்டோ ரிக்ஷாவில் புறப்பட்டார்கள் அவர்கள். • -:

கோடம்பாக்கத்தில் வடபழனி தாண்டி ஒரு பிரபல திரைப்பட ஸ்டூடியோவின் பெயரை ஆட்டோ டிரைவரிடம் சொல்லியிருந்தான் சின்னி. கையில் காயத்துக்காகக் கட்டுப் போட்ட நிலையில் அவன் அலைவதைப்பரிவோடு குறிப் பிட்டுப்பேசினான் முத்துராமலிங்கம். 'கையை இந்த நிலையிலே வச்சுக்கிட்டு எனக்காக நீ அலையறதைப் பார்ததுச் சங்கடமா இருக்கு சின்னி!' !